நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக, மக்கள் ஒற்றுமையுடன் தீப ஒளியேற்றி தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியதுடன், பிரதமர் மோடிக்கு ஆதரவையும் தெரிவித்தனர்.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் மூலம் ஒளியேற்றி தங்கள் பகுதியில் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சினர்.
மோடியின் ஓர் அழைப்பு ! ஒரே தேசமாக மக்கள் எழுந்து நிற்க…. கொரோனாவை விரட்ட இந்தியா கைகோத்து நின்றது. கொரோனாவுக்கு எதிராக இந்தியா ஒன்றிணைந்து நின்றது.
பிரதமரின் அழைப்பை ஏற்று, மின்விளக்குகளை அணைத்துவிட்டு, இந்தியா முழுவதும் வீடுகளில் அகல் விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்றி, ஒளி வெள்ளத்தில் நிறைத்தனர்.
கொரோனா இருளை அகற்ற , பிரதமர் மோடி அழைப்பு விடுத்தபடி, இரவு 9 மணிக்கு தொடங்கி 9 நிமிடங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றினர்.
இதற்கு முன்னதாகவே பிரபலங்கள் பலரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். சென்னை மாநகரம் மக்கள் தீபத்தில் ஒளிர்ந்தது. பட்டாசு வெடித்தும், வாணவெடிகளை வெடித்தும் மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிக்காட்டினர்.
என்னா ஒரு கெத்து… அதுவும் விளக்கு ஏற்ற தென்னிந்திய முறைப்படி.. அதுவும் நம்ம தமிழ்நாட்டு வழக்கப்படி…வேட்டி சட்டை துண்டு சகிதமா… கையில் மிகச் சரியா ஒரு விளக்கு எடுத்துட்டு வந்து… ஆளுயர விளக்கை அலாக்கா..ஏற்றி… வாழ்த்துகள் பிரதமரே! #மோடி #மோடி கொரோனா வீடியோ #விளக்கு வைப்போம்
அனைவர் வீட்டிலும் மின்விளக்குகளை அணைத்து அகல் விளக்கு ஏற்ற பாரதப் பிரதமர் மோடி சொன்னால் பலரும் வெடியெல்லாம் போட்டனர்.
நாடு முழுவதும் 95 சதவீதம் மக்கள் தங்கள் வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து, கொரோனாவை விரட்ட அகல் விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்றினர்.
சன் டி.வி. கே.டி.வி., கலைஞர் டிவி போன்ற தி.மு.க குடும்ப தொலைக்காட்சிகள் தவிர எல்லா டி.வி.க்களும் விளக்கேற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின.