தவறான செயல்களில் ஈடுபடும் தப்ளிக் இ ஜமாத் உறுப்பினர்களை சுட்டுத் தள்ள வேண்டும் : ராஜ் தாக்கரே ஆவேசம்!

raj thackary - 2026

கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்கியிருக்கும் தப்ளீக் இ ஜமாத் உறுப்பினர்கள், பெண்கள் மருத்துவ ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், சதித்திட்டங்களில்’ ஈடுபட்டதாகவும் கூறப்படும் நிலையில், அவர்களை சுட்டுத் தள்ள வேண்டும் என்று மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே சனிக்கிழமை ஆவேசத்துடன் கூறினார்.

இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். மக்களிடையே உண்மையை வெளிப்படுத்துவதற்காக , அத்தகைய நபர்களின் வீடியோக்களை சமூக ஊடகங்களில் வைரலாக பரப்ப வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

காவல் துறையினர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் குறித்துப் பேசிய ராஜ் தாக்கரே, ‘நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும்போது காவல்துறையினர் தாக்கப்பட்டு, துஷ்பிரயோகம் நடப்பதை நாம் காணலாம்’ என்றார்.

தில்லியில் உள்ள தப்ளிக் இ ஜமாத் மார்க்கஸில் கலந்து கொண்டு, கொரோனா தொற்று காரணமாக தனிமைப் படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள் முறைகேடாக நடப்பது குறித்து கருத்து தெரிவித்த ராஜ் தாக்கரே, அத்தகையவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த வேண்டும். அவர்களுக்கு ஏன் சிகிச்சை கொடுக்க வேண்டும்? அவர்களைக்காக ஒரு தனி பிரிவு உருவாக்கப்பட்டு, அவர்களின் சிகிச்சை நிறுத்தப்பட வேண்டும்’ என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

“தங்கள் மதம் நாட்டை விட பெரியது என்று நினைத்து, சில சதித்திட்டங்களில் ஈடுபட விரும்பி… அவர்கள் மக்கள் மீது துப்புகிறார்கள்! காய்கறிகளை வீசி எறிகிறார்கள். செவிலியர்கள் முன் நிர்வாணமாக சுற்றித் திரிகிறார்கள்” என்று ஆவேசத்துடன் கூறினார்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

இதுபோன்றவர்களின் வீடியோக்களை வைரலாக்கிவிட வேண்டும். அப்பொழுது தான் மக்கள் மத்தியில் உண்மை என்ன என்பது வெளிப்படும் என்றார் ராஜ் தாக்கரே!

மேலும், “வெள்ளிக்கிழமை தனது வீடியோ செய்தியில், பிரதமர் அதைப் பற்றி பேசியிருக்க வேண்டும்” என்று மோடியைக் குறை கூறினார்.

விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைப்பதைப் பற்றி பேசுவதை விட, பிரதமர் நரேந்திர மோடி தற்போதைய சூழ்நிலை மற்றும் கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கை எந்த நிலையில் இருக்கிறது என்பதை குறித்து மக்களிடம் தெளிவுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

கடந்த மாதம் வஸாயில் நிஜாமுதீன் போன்ற கூட்டத்துக்காக அனுமதி மறுத்ததற்காக மகாராஷ்டிரா காவல்துறையை எம்.என்.எஸ் தலைவர் ராஜ் தாக்கரே வாழ்த்தினார். இதனால் கொரோனா வைரஸ் பரவுவது மகாராஷ்டிராவில் பெருமளவு தடுக்கப் பட்டிருக்கிறது என்றார். கடந்த மாதம் நிஜாமுதீன் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டபோது கொரோனா வைரஸ் பரவுவது குறித்து தில்லி காவல்துறை உணரவில்லை என்றார் அவர்.

மேலும், இது பழி வாங்குவதற்கான அல்லது விளையாடுவதற்கான நேரம் அல்ல. “மதத்தைப் பற்றியும் பேச வேண்டிய நேரம் இதுவல்ல, ஆனால் முஸ்லிம்களிடையே சில பிரிவுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? சில நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு இருப்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். நாங்களும் வீட்டில் தான் இருக்கிறோம். மக்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் லாக்-டவுன் காலம் நீட்டிக்கப்படலாம், இது தொழில்கள் மற்றும் அரசாங்கத்தின் செயல்பாட்டை மோசமாக பாதிக்கும்! இது பொருளாதார நெருக்கடிக்கும் வழிவகுக்கும்….

ALSO READ:  தாம்பரம் - தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

மக்களுக்கு சேவை செய்வதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளதற்காக மருத்துவர்கள், காவல்துறை மற்றும் பிற அரசு ஊழியர்கள் தண்ணீர், மின்சாரம் மற்றும் உணவு தானியங்களை வழங்குபவர்களைப் பாராட்ட வேண்டும் என்றார் ராஜ் தாக்கரே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories