ஒமிக்கிரான்: மாவட்ட ஆட்சியர்களுக்கு செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்..!

சற்றுமுன் தமிழகம்
radhakrishnan
radhakrishnan

தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்..

ஒமிக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில், இந்தியாவில் சர்வதேச விமாநிலையங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதுவரை ஆந்திரா, சண்டிகர், மஹாராஷ்டிரா, கர்நாடகா, தில்லி, குஜராத், தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 168-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளது.. இதனால் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க 1.1 லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளன. மேலும் ஆக்ஸிஜன் சிலிண்டர், வெண்டிலேட்டர் உள்ளிட்ட வசதி உள்ளிட்ட வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

கொரோனாவுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் கையிருப்பில் உள்ளன என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஒமிக்ரான் மற்றும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்டங்களில் பின்பற்றப்படுவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆக்ஸிஜன் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் போன்ற மருத்துவ வசதிகளின் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைக்கவும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.