madhurai - 2026

மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்!

சற்றுமுன் அடடே... அப்படியா? ஆலயங்கள் உள்ளூர் செய்திகள் மதுரை
madhurai - 2026

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் டிசம்பர் 26-ம் தேதி தெப்பக்குளத்தில் நடப்பட்டது.

இந்நிலையில் கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி சுவாமி சன்னதி எதிரே உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு எழுந்தருளிய மீனாட்சியம்மன், சுந்தரேசுவரருக்கு சிறப்புப்பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

இதில் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை கலந்துகொண்டார். ஒமைக்ரான் தொற்று பாதிப்பால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நடந்தது.

தைப்பூச நாளான ஜனவரி 18-ம் தேதி தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.

ஜன.,12ல் சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை, ஜன.,14ல் வலைவீசி அருளிய லீலை, கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் லீலை நடக்கிறது. ஜன.,15 எடுப்புத்தேர், ஜன.,16 தெப்பம் முட்டுதள்ளுதல், ஜன.,17 சிந்தாமணி கதிரறுப்பு மண்டபத்தில் கதிர் அறுத்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.ஜன.,18 காலை 10:40 மணி முதல் 11:04 மணிக்குள் தெப்ப உற்ஸவம் நடக்கிறது.அன்று காலை இரு சுற்றுகளும், இரவு ஒரு சுற்றும் தெப்பக்குளத்தை அம்மனும், சுவாமியும் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருவர்

கொரோனா தடுப்பு நடவடிக்கையை பொருத்தே விழா கட்டுப்பாடு அறிவிக்கப்படும் எனக் கோயில் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.