vaccine 1 - 2026

பூஸ்டர் தடுப்பூசி: கால அட்டவணை இன்று வெளியிடு!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா நலவாழ்வு
vaccine 1 - 2026

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா அசுர வேகம் எடுத்து பரவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்தும் பணிகள் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் ஓமிக்கிரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் ஜனவரி 10ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், முன் களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் கழித்து பின்னர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில் கூடுதலாக பூஸ்டர் தடுப்பூசி அல்லது முன்னெச்சரிக்கையாக போடுவது பற்றிய தகவல் குறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியதாவது, மூன்றாவது தடுப்பூசிக்கு புதிதாக பதிவு செய்ய தேவையில்லை இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் நேரடியாக தடுப்பூசி மையத்துக்குச் சென்று தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்.

தடுப்பூசி கால அட்டவணை இன்று வெளியிடப்பட உள்ளது. ஆன்லைன் வழியாக பதிவு செய்வதற்கு வசதியாக இன்று மாலை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நேரடியாக மையத்திலேயே பதிவு செய்துகொள்ளும் முறை வரும் 10ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் அதில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.