நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் தாக்கம். கடுமையாக இருந்தது. இந்தநிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியம் திடீரென மழை பெய்தது. நெல்லை சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டைபேட்டை, ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பலத்த மழை பெய்தது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது. ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியில் பெய்த பலத்த மழையால் மின்சார ஒயர்கள் அறுந்து விழுந்தது. திருநெல்வேலி சுற்று வட்டார பகுதிகளில் நெல் அறுவடை, நாற்று நடும்பணி மும்முரமாக நடந்து வருகிறது. திடீர் மழையால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டதில் தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம், தட்டார்மடம், உடன்குடி, குலசேகரன்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர், தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, குரும்பூர், ஏரல், ஸ்ரீவைகுண்டம், நாசரேத் உள்ளிட்ட பகுதிகளில் பரவலான மழை பெய்தது.
- Home
- உள்ளூர் செய்திகள்
- திருநெல்வேலி,தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை: விவசாய பணிகள் பாதிப்பு
