Loudspeaker - 2026

ஒரு கண்ணில் வெண்ணெய் இங்கில்லை.‌.. வழிபாட்டு தலங்களில் ஸ்பீக்கருக்கு தடை!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
Loudspeaker - 2026

கர்நாடகாவில் சிக்மங்களூர் நகராட்சியில்
வழிபாட்டு தலங்களில் லவுட் ஸ்பீக்கர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா முழுமைக்கும் இந்த தடை விதிக்கப்படவில்லை. சிக்மங்களூர் நகராட்சியில் இந்த கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி அங்கு இருக்கும் அனைத்து வார்டுகளிலும் உள்ள மசூதிகள், சர்ச்கள், கோவில்களில் இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்பே அங்கு லவுட் ஸ்பீக்கர் வைக்க பர்மிஷன் வாங்கி இருக்கும் பட்சத்தில் அதை நகராட்சி நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் வழிபாட்டு தலங்களில் இருக்கும் ஸ்பீக்கர்கள் அகற்றப்படும் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பல்வேறு பிரிவை சேர்ந்த மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும்.

ஒலி மாசு ஏற்படுவதாக பலர் வைத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும். அனைத்து கோவில், மசூதி, சர்ச்சில் இது தொடர்பான சோதனைகள் செய்யப்படும் என்றும் அந்நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் இந்த ஸ்பீக்கர் வைத்து ஒலிக்கக் கூடாது என்று பல வருடங்கள் முன்பே கோர்ட் அறிவித்ததிருந்தாலும், கோவில்களில் மட்டுமே தினமும் போடப்பட்டு வந்த ஒலிப்பெருக்கி நிறுத்தப்பட்டது,

ஆனால் மசூதிகள், சர்ச்சில் தினமும் நேரம் காலமின்றி ஒரு நாளைக்கு பல தடவை போடப்படுவது நிறுத்தப்படவில்லை. இதுக்குறித்த புகார்களுக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதிலும் விதிக்குள் சிக்கியது இந்துக் கோவில்கள் மட்டுமே.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் சிக்மங்களூர் நகராட்சியில் மதவேறுபாடின்றி ஒலிப்பெருக்கி அகற்றப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.