Thirupathi - 2026

திருப்பதி உண்டியல் பணத்தை மறைத்து எடுத்துச் சென்ற நபர் கைது!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா கிரைம் நியூஸ்
Thirupathi - 2026

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை தனது உள்ளாடையில் மறைத்து வைத்து கொண்டு சென்ற போது கையும் களவுமாக பிடிபட்டதால் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலின்படி காணிக்கைகளைச் செலுத்துகின்றனர்.

அவ்வாறு தினந்தோறும் 3 முதல் 4 கோடி ரூபாய்க்கும் மேல் உண்டியலில் காணிக்கையாக தேவஸ்தானத்திற்கு வருவாய் வருகிறது.

இந்த காணிக்கைகளை என்பதற்காக சுழற்சி முறையில் தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் அரசுத்துறை சார்ந்த பணியாளர்கள் பரக்காமணி சேவையில் தன்னார்வலர்களாக உண்டியல் காணிக்கைகளை எண்ணி வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பதி சாய் நகரை சேர்ந்த வெங்கடேஷ்வர் (59) என்பவர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி முடித்து விட்டு கோயிலில் இருந்து வெளியே வரும் போது தனது உள்ளாடையில் ரூ . 2000 நோட்டுகள் 10 மறைத்து வைத்திருப்பது விஜிலன்ஸ் அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ரூ 20 ஆயிரத்திற்கும் பணத்தை பறிமுதல் செய்து திருமலை முதலாவது நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து வெங்கடேஷ்வரரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.