
- தங்கராஜ். பி
நவம்பர் 20-ஆம் தேதி உச்ச நீதிமன்றம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என்ற இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து, நவம்பர் 21 இரவு தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது.
நவம்பர் 23-ஆம் தேதி காலை நிலவரப்படி, இந்த மனு இன்னும் விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லை. பொதுவாகச் சீராய்வு மனுக்கள் நீதிபதிகளின் அறையில் (In Chambers) பரிசீலிக்கப்படும்; ஆனால், இந்த மனுவைத் திறந்த நீதிமன்றத்தில் (Open Court) அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனத் தமிழக அரசு கோரியுள்ளது.
நாளை (நவம்பர் 24) கார்த்திகை தீபம் என்பதால், அதற்கு முன்பாகவே உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
இடைக்கால தடை இல்லை என்றால் அடுத்து என்ன?
ஒரு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகச் சீராய்வு மனு அல்லது மேல்முறையீடு தாக்கல் செய்வதால் மட்டுமே, அந்த உத்தரவுக்குத் தானாகவே இடைக்காலத் தடை (Automatic Stay) கிடைத்து விட்டதாக கருத முடியாது.
சீராய்வு மனுவை விசாரிக்கும் நீதிமன்றம், முந்தைய உத்தரவை நிறுத்திவைத்து இடைக்காலத் தடை உத்தரவு (Stay Order) பிறப்பித்தால் மட்டுமே, அந்த உத்தரவைச் செயல்படுத்துவதை நிறுத்த முடியும்.
நீதிமன்றத்தின் தடையாணை இல்லாத பட்சத்தில், முந்தைய உத்தரவைச் செயல்படுத்தத் தவறினால் அது நீதிமன்ற அவமதிப்பு (Contempt of Court) நடவடிக்கையாகக் கருதப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடைமுறைகள் செயலாக்கம் பெறும்.
இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியரை தீபம் ஏற்றும் பொறுப்பாளராக நீதிமன்றம் நியமித்து உள்ளது. தீபம் ஏற்ற தடை ஆணை இல்லாத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் தீபம் ஏற்ற தவறினால் அவர் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக கருதப் படுவார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஒரு மாநில அரசு நிறைவேற்ற மறுத்தால், இந்தியக் குடியரசுத் தலைவருக்கு (மத்திய அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில்) அந்த மாநில ஆட்சியைக் கலைக்கும் அதிகாரம் உள்ளது.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 144 படி , இந்திய எல்லைக்குள் உள்ள அனைத்து சிவில் மற்றும் நீதித்துறை அதிகாரிகளும் உச்ச நீதிமன்றத்திற்குத் துணையாகச் செயல்பட வேண்டும் என்பது கட்டாயமாகும்.
சட்டப்பிரிவு 365 ன் படி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துமாறு மத்திய அரசு வழங்கும் வழிகாட்டுதல்களை (சட்டப்பிரிவு 256-ன் கீழ்) மாநில அரசு மதிக்கத் தவறினால், அந்த மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் தோல்வி அடைந்து விட்டதாகக் கருதி குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க முடியும்.
சட்டப்பிரிவு 356 என்ன கூறுகிறது?
ஒரு மாநில அரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட முடியாத சூழல் உருவாகியுள்ளது என ஆளுநரின் அறிக்கை மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ குடியரசுத் தலைவர் திருப்தி அடைந்தால், அந்த மாநில அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம். இந்த சட்டப்பிரிவு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சுமார் 85 முறை பயன் படுத்தப்பட்டு ஆட்சி கலைப்புகள் செய்யப்பட்டு உள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றலாம், அங்கே இருக்கும் தர்காவில் ஆடு, மாடு வெட்டக் கூடாது என்பது எல்லாம் நீதிமன்ற தீர்ப்பு. அந்த தீர்ப்பை தவெ க உதாசீனம் செய்ய திட்டமா? அதன் அஸ்திவாரம்தான் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதா? இது போன்ற கேள்வி ஓட்டு போட்ட இந்துக்கள் மத்தியில் எழுவது நியாயம் அல்லவா?
திருப்பரங்குன்றம் சம்பவம், முகலாயர் ஆட்சிக்கு பிந்தைய கால கட்டத்தில், இந்து ஆன்மிகத்தின் மீது ஆட்சியாளர்கள் நடத்திய மிகப் பெரும் தாக்குதல் என்று கருத இடமுண்டு.
இந்த தாக்குதல் உணர்த்தும் செய்தி என்ன?
பாரம்பரியத்தை பாதுகாக்க ஹிந்து மக்கள் ஒன்றிணைய வேண்டும். இந்து விரோத சக்திகள் ஆட்சியில் அமர இடம் கொடுக்கக் கூடாது. இல்லையென்றால். கோவிலில் மணியடிக்க, தேர் இழுக்க, தேவாரம் பாட, ஓம்கார முழக்கம் செய்ய, மத ஊர்வலம் நடத்த, ஏன் ஒரு தீபம் ஏற்றக்கூட வேற்று மத பழமைவாதிகளின் அனுமதிக்கு காத்திருக்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவாக அரசு இயந்திரம் செயல்படும். மக்கள் வரிப் பணத்தில் நீதிமன்றம் சென்று அவர்களுக்காக அரசு வழக்காடும் என்பதுதான்.
நீதிமன்ற அவமதிப்பு செய்யும் அரசுகள் டிஸ்மிஸ் செய்யப்பட்ட வேண்டும்தானே!


