சபரிமலையில் 144 தடை உத்தரவு ஏன்? விளக்கம் அளிக்க மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

kerala high court - 2026

சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதியில் எதற்காக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது?

144 தடை உத்தரவு அமல் பற்றி விளக்கம் தர வேண்டும் என்று, கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இன்று காலை நீதிமன்றத்தில் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப் பட்ட போது, 144 தடை உத்தரவு என்பது, போராட்டக்காரர்களுக்கு என்று குறிப்பிடும் போது, சபரிமலை கோயிலில் பக்தர்கள், போராட்டக்காரர்கள் என்பதை எப்படி பிரித்துப் பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியது நீதிமன்றம்!

04 Sep25 kerala high court - 2026போலீஸ் அதிகாரிகள் சிலர் சட்டத்தைத் தம் கையில் எடுத்துக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், கூட்டம் கூடி சரண கோஷம் விளித்தலும், தங்குவதும் ஒரு கோயிலில் தவறு என்பதை எப்படிச் சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பியது.

மேலும், எதன் அடிப்படையில் சபரிமலை ஐயப்பன் கோயிலைச் சுற்றி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் இது தொடர்பாக இன்று மதியம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேரள ஏஜி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.