
நடிகர் மற்றும் தயாரிப்பாளரான கமல் ஹாசன் நடிப்பில் தற்போது புதியதாக மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அதற்காக அரசியலில் தீவிரமாக களமிறங்கியுள்ளார்.
ஒரு புறம் அரசியல் மறுபுறம் சினிமா என பிஸியாகவே இருக்கும் கமல் ஹாசனுக்கு போட்டியாக நடிகர் ரஜினிகாந்தும் சினிமா, அரசியல் என இரண்டு துறைகளிலும் களமிறங்கியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 1996-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் 2 ம் பாகம் 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியாக உள்ளது. இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அண்மையில் தொடங்கியது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கொச்சியில் அளித்துள்ள ஒரு பேட்டியில்: 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும். தோ்தல் வரவுள்ள நிலையில் எனது நடிப்பில் வெளியாகும் கடைசி படமாக இந்தியன் 2 இருக்கும். இதற்கு பின்னா் நான் படங்களில் நடிக்க மாட்டேன். ஆனால் எனது பட தயாரிப்பு நிறுவனம் தொடா்ந்து செயல்படும். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளிலும் அது தொடா்ந்து ஈடுபடும். என்று அவர் தொிவித்துள்ளாா்.
Posts by SMS-சங்கர்:
- தென்காசி மாணவ-மாணவிகள் தேசிய அளவில் சாதனை: ‘கிளியாந்தட்டு’ போட்டியில் வெண்கலம்!
- செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!
- ஆவணி அவிட்டம்; விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றி வழிபாடு!
- 10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
- தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

