நாடு முழுவதும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் 15 பேர் கைது

சற்றுமுன்

புது தில்லி:
நாடு முழுவதும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருவதுடன், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் மிகவும் ரகசியமாக செயல்பட்டு வருவது அண்மைக் கால சம்பவங்களால் உலகத்துக்குத் தெரியவந்துள்ளது. இதனால், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு பல்வேறு நாடுகள் தடை விதித்து வருகின்றன.
 
குறிப்பாக, இந்த இயக்கத்திற்கு பணம் சேர்க்கவே பல்வேறு நாடுகளில் இருந்து அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து அவர்களுக்கு ரகசியமாகப் பயிற்சியும் கொடுத்து வருகின்றனர். இவ்வாறு ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் சுமார் 15 பேரை நாடு முழுவதும் போலீசார் கைது செய்துள்ளனர்.
 
தில்லி சிறப்பு போலீசார் நேற்று முன்தினம் இரவு மேலும் ஒருவரை கைது செய்தனர்.  இதில், இப்ராகிம் சையது (28) என்பவனை ரகசிய தகவலின் பேரில் கைது செய்த போலீசார், அவனிடம் தீவிர விசாரணை நடத்தியதில், இவன் இந்தியாவில் தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், ஐ.எஸ். இயக்கத்தில் சே்ந்து பணியாற்ற  சிரியா செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது. அவனிடம் இருந்த ரூ.85 ஆயிரம் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.