இஸ்லாமியரை சகோதரராகவும் தோழராகவும் போற்றிய ஒருத்தரையே போட்டுத் தள்ளிட்டானுங்களே! கதறும் நண்பர்கள்!

உரத்த சிந்தனை சற்றுமுன் திருச்சி புகார் பெட்டி
ramalingam thirupuvanam1 - 2026

அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தில், இந்துக்களும் இஸ்லாமியர்களும் வியாபாரத் தொடர்பு, நட்பு ரீதியான பழக்கம் என ஒற்றுமையாகவே இருந்து வந்தார்கள். அதனை சீர்குலைப்பது போல், இஸ்லாமிய பயங்கரவாதம் இப்போது தமிழகத்தின் மூலை முடுக்கு எல்லாம் ஆட்டிப் படைக்கிறது. அதற்கான நிகழ்வுகளே தற்போது நடைபெற்று வரும் மதப் படுகொலைச் சம்பவங்கள் என்று கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இஸ்லாமிய மதமாற்றத்தைத் தடுத்தார் என்றும், உன் குல்லாவை நான் போடுகிறேன், அல்லாஹு அக்பர் என்று சொல்கிறேன், எங்களுக்கு எந்த வேறுபாடும் கிடையாது, ஆனால் நீங்கள் அப்படிச் செய்ய முடியுமா? எங்கள் திருநீறை எடுத்து நீ பூசுவாயா என்று கேள்வி கேட்டு, ஏன் இப்படி மதம் மாற்ற அலைகிறீர்கள். இந்த நேரத்தில் வேறு உருப்படியான வேலை பார்த்தால், நம் நாடு முன்னேறுமே என்றும் நாட்டுப் பற்றுடன் கூறிய பாமக., பிரமுகர் ராமலிங்கம், அதே நாளில் நள்ளிரவில் பயங்கரவாதிகளால் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

பாமக., பிரமுகரான ராமலிங்கம் இஸ்லாத்தை எதிர்க்கவில்லை. இஸ்லாமியரை அவதூறாகப் பேசவில்லை. இஸ்லாமியரும் நம் நண்பர்களே, அவர்களும் நம் நட்பு மக்களே! அவர்களும் வியாபாரத்தில் மேன் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று வேண்டிக் கொண்ட சாதாரண ஓர் இந்துவாகவே இருந்தவர். அவர் தன் பேஸ்புக் பக்கத்தில், தான் சந்தித்த நபர்கள், இஸ்லாமியரின் விழாக்களில் பங்கு கொண்டது, இஸ்லாமிய நண்பர்களின் கடைகளில் திறப்பு விழாவுக்குச் சென்றது என்று உண்மையான இந்துவாகவே திகழ்ந்திருக்கிறார்.

ramalingam thirupuvanam - 2026

நீ நீயாக இரு, நான் நானாக இருக்கிறேன், நாம் நாமாக இருப்போம் என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வந்த ராமலிங்கம், இஸ்லாமிய மதமாற்றத்தையும், தீவிர அடிப்படைவாதத்தையும் மட்டுமே எதிர்த்துக் கேள்வி கேட்டுள்ளார். அப்போது கூட, அவதூறாக எதுவும் பேசிவிடவில்லை. ஆனால், தாங்கள் பயங்கரவாதிகளே என்று காட்டியிருக்கின்றனர் அந்த அடிப்படைவாதிகள்.

இந்நிலையில், ராமலிங்கத்தின் பழைய புகைப்படங்கள், அவர் அனைத்து தரப்பு மக்களுடனும் பழகிய சம்பவங்கள் இவற்றை நினைவு கூர்ந்து, உனக்கா இந்த நிலை என்று கதறி வருகின்றனர் அவரது நண்பர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.