அனைவருக்கும் 2 ஏக்கர் நிலம் போல்… 1 கோடி சாலைப்பணியாளர் வேலை..! தில்லுமுல்லு திமுக!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

MK Stalin - 2026பாயிண்டை பிடிச்சிருக்காங்க… பாஜக நெட்டிசன்கள்.!! ஸ்டாலினின் கதி கலங்க வைக்கும் அறிவிப்பு குறித்து கலாய்க்கிறாங்க..!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், 10வது படித்த ஒரு கோடி பேருக்கு சாலைப் பணியாளர்கள் வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இது குறித்த சில சந்தேகங்கள் சமூக ஆர்வலர்கள் முன்வைத்து வருகின்றார்கள்.  அதில், தமிழகத்தில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் 1 கோடி சாலைப் பணி யாளர்களை பணியமர்த்த முடியாமல் போனால் கூடப் பரவாயில்லை.

இந்தியா முழுவதுமே தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக பட்சம் 5 லட்சம் பேர் மட்டுமே பணியமர்த்த முடியுமாம்; சொல்கிறது புள்ளி விவரம்.!

அதாவது கடந்த நவம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 1.13 லட்சம் கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

தற்போது 5.5 முதல் 7 கி.மீ. தூர சாலைக்கு ஒரு சாலைப் பணியாளர் வீதம் நியமிக்கப் பட்டு வருகிறார்கள்.

அப்படியானால்… திமுக சொன்னபடி இந்த 1.31 லட்சம் கி.மீ. தூரத்துக்குள் ஒரு கோடிப் பேரை நியமிப்பது எப்படி.??

ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 76 பேரை நியமித்தால் மட்டுமே இது சாத்தியப்படும்’

இதற்கு திமுக தரப்பில் இருந்து  என்ன பதில் வரும் என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்…. என்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

ஸ்டாலினின் இந்த நச்சுக் கருத்துக்கு நெட்டிசனின் ஒரு நச் கருத்து…! 

Ganesh Ramaswamy ஏங்க பொறம்போக்கு நிலம் எவ்வளவு இருக்கு மற்றவை எவ்வளவு இருக்கு என்று டீடெய்ல் தெரியாமல் ஆளுக்கு இரண்டு ஏக்கர் தருகிறேன் என்று சொல்லி அம்மாவிடம் சட்டசபையில் வாங்கி கட்டிக் கொண்டவரின் பிள்ளை தானே இந்த ஆள்! 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.