சிறைச்சாலைகளை நக்ஸல்களின் பயிற்சிக் கல்லூரி ஆக்கி விடலாமே!

உரத்த சிந்தனை புகார் பெட்டி

rajiv gandhi chor - 2026

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் முடிவுக்கு விட்டுள்ளது உச்ச நீதிமன்றம்

பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் மற்றும் வைகோ போன்ற பிரிவினைவாதிகள்

7பேரை ஆளுநர் விடுவிக்க வேண்டும் என அறிக்கை விட ஆரம்பித்து விட்டனர். இன்னும் சொல்லப் போனால் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டனர்

இதில் தற்போது வைகோ திமுக திருமா ஆகியோர் காங்கிரஸோடு கூட்டணி வேறு இந்த பொழைப்பை என்னன்னு சொல்வதோ தெரியலை

ராஜீவ் போர்பஸ் ஊழல் குற்றசாட்டு சுமத்தப்பட்டவர். போர் கப்பலை சுற்றுலா டாக்சியாக மாற்றியவர் சரி தான் மாற்றமில்லை

ராஜீவ் அரசியல் ரீதியாக நமக்கு பிடித்தமில்லாதவராக , கொள்கை ரீதியாக நமக்கு முரண்பட்டவராக இருக்கலாம்

ராஜீவ் நல்லவரோ கெட்டவரோ ஆனால் இந்த தேசத்தின் பிரதமர்

ராகுல் , பிரியாங்கா என்ற பச்சிளம் குழந்தைகளின் தந்தை

வெளிநாட்டு பெண்மணி என்றாலும் கூட சோனியாவின் கணவர்

ராஜீவ் கொலை வழக்கு என்பதால் ராஜிவ் மட்டுமே இறந்து போனதாக இதில் சிலர் நினைக்ககூடும்

ஆனால் ராஜிவோடு சேர்த்து 19 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர்

அந்த காவல்துறையினரின் குடும்பம் குழந்தைகள் நிர்கதியாகி போனதே

எல்லா வழக்குகளிலும் சற்று பிழை இருக்க தான் செய்யும். ராஜீவ் வழக்கிலும் அது இருக்கலாம். ஆனால் நீதிமன்றத்தில் அது அலசி ஆராயப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு மேல்முறையீடு செய்யப்பட்டு அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தூக்கு தண்டனை வழங்க வேண்டிய நிலையில் நீதிமன்ற சாட்சியங்களை முன்னிறுத்தி ஆயுள் தண்டனை வழங்ப்பட்டுள்ளது

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டுமென்றால்

தமிழக சிறையில் உள்ள எல்லா கொலையாளிகளையும் விட்டுவிடலாமே ?

அதிலென்ன பாரபட்சம்

(அல்உம்மா இஸ்லாமிய பயங்கரவாதிகள் இந்த 7 பேர் விடுதலைக்கு ஆதரவளிப்பது இதற்காக தான்)

கொலையாளிகளையே விடுதலை பண்ணி விட்டுட்டா சின்ன சின்ன தப்பு பண்ணிணவன் மட்டும் பைத்தியகாரனா

அவர்களையும் விடுதலை பண்ணிட்டு

சிறைசாலைகளை பிரிவினைவாத நக்சல்களின் பயிற்சி கல்லூரி ஆக்கி விடலாமே

கா.குற்றாலநாதன்
நெல்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.