இந்தியாவுக்கு நன்றி! மக்கள் விருப்பங்களை நிறைவேற்ற கடினமாக உழைப்பேன்!: பிரதமர் மோடி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

modi superb - 2026

இந்தியாவுக்கு நன்றி! எங்கள் கூட்டணி மீது மக்கள் வைத்த நம்பிக்கைக்கு தலைவணங்குகிறேன். இது மக்களின் ஆசைகளை நிறைவேற்ற மேலும் கடினமாக உழைக்க எங்களைத் தூண்டியிருக்கிறது.

நான் பாஜக., நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் அர்ப்பணிப்பை, உணர்வை, கடின உழைப்பைக் காட்டி, ஒவ்வொரு வீடாகச் சென்று, நம் வளர்ச்சிப் பணிகள் குறித்த தகவலைக் கொண்டு சென்றுள்ளனர்.. என்று பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, வாராணசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 3.85 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

pm modi in kedarnath cave2 - 2026உ.பி.,யின் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டார். அவரை எதிர்த்து சமாஜ்வாதி சார்பில் ஷாலினி யாதவ், காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் ஆகியோர் போட்டியிட்டனர். மே 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இன்றைய வாக்கு எண்ணிக்கை முடிவில், பிரதமர் மோடி 3.85 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2வது இடத்தை சமாஜ்வாதி வேட்பாளர் பிடித்தார். காங்கிரஸ் வேட்பாளர் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். சென்ற முறை இதே தொகுதியில் 3.70 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி பெற்றார். கடந்த முறை வென்ற வாக்கு வித்தியாசத்தை விட இந்த முறை அதிக வாக்குகள் பெற்றுள்ளார் மோடி.

இதனிடையே தனது வெற்றி குறித்து கூறிய பிரதமர் மோடி, இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என அவர் தனது டிவிட்டர் பதிவில் உடனடியாக பதிவு செய்தார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,  அனைவரும் இணைந்து + அனைவரின் வளர்ச்சி +  ஒவ்வொருவரின் நலன் = இந்தியாவின் வெற்றி.  அனைவரும் ஒன்றிணைந்து வளர்ச்சி அடைவோம்.  அனைவரும் ஒன்றிணைந்து வளம் பெறுவோம்.  அனைவரும் ஒன்றிணைந்து வலிமையான  அனைத்தையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவோம். இந்தியாவுக்கு மீண்டும் வெற்றி. .,.. என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.