மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

modi rajini - 2026

மோதிபதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு நடிகர் ரஜினிக்கும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது!

17ஆவது நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி அடைந்தது பாஜக.,! இதை அடுத்து, வருகிற 30-ஆம் தேதி வியாழன் அன்று தில்லியில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் மோதி 2-ஆவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

இந்த விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த பாஜக.,திட்டமிட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே போல், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து கமல் இன்னும் முடிவு செய்யவில்லை என தகவல் வெளியானது!

மேலும், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது. மோதி இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டதை  தொண்டர்கள் பெருமளவில் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.