ஹிந்தி எதிர்ப்பு அரசியல் தலைமுறைகள்!

உரத்த சிந்தனை கட்டுரைகள் லைஃப் ஸ்டைல்

vaiko stalin karunanidhi - 2026

ஹிந்தி எதிர்ப்பு என்னும் கீழ்த் தரமான அரசியல்…!

1969ல் புதிய வீராணம் திட்டம் , பூச்சு கொல்லி மருந்து ஊழலில் ஆரம்பித்த திமுக – கருணாநிதி அவர்களின் சாதனை 2G ஏறக்குறை 1.5லட்சம் கோடி இழப்புடன் ஒரு பெரிய ஊழல் பட்டியலுடன் அனைத்துவிதமாகவும் கோடிகளை குவித்தனர்.

அவரது கட்சி தலைவர்கள் சலைத்தவர்கள் அல்ல. பொன்முடி, கீதா ஜீவன் , எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், எ.வ.வேலு, என்.கே.கே.பி. இராஜா, தங்கம் தென்னரசு,சாத்தூர் இராமச்சந்திரன் என்று எந்த தலைவரை எடுத்தாலும் ஒரு லிஸ்ட் ஊழல் வழக்கு உண்டு..

அரசியல் தோல்வி, ஊழல் என்று அனைத்தையும் மறைக்க இருக்கவே இருக்கு “தமிழண்டா கோசம்”.
திமுக கவர்ச்சி அரசியலை ஆரம்பித்த அண்ணா துரை ஆட்சியை பிடித்தார்.. அவர் முதலமைச்சராக இருந்த 2 வருடங்கள் சாதனை எதுவும் கூற முடியாது என்றாலும் ஊழல் கிடையாது.

ஆனால் கருணாநிதி தலைமை ஏற்ற பின் திமுக அனைத்தையும் ஆடி தீர்த்தது.

ஆனால் எப்போது எல்லாம் தனக்கு பிரச்சனை வருமோ அப்போது எல்லாம் திமுக கருணாநிதி தனி தமிழ்நாடு கோசம் , ஹிந்தி எதிர்ப்பு மூலம் மக்களை திசை திருப்புவார், மத்திய அரசை மிரட்டுவார்.

இவர்களிடம் இருக்கும் ஆயுதம்
1.ஹிந்தி எதிர்ப்பு (ஹிந்தி வெறுப்பு)
2.எல்லா தோல்விக்கும் மத்திய அரசை கை காட்டி மக்களை தூண்டிவிட்டு குழப்புவது.

ஒரு மைல் கல்லில் உள்ள ஹிந்தியை வைத்து தந்திரமாக அரசியல் செய்வதில் இந்த இரண்டு அதிமுக,திமுக முதலைகளும் மிக புத்திசாலிகள்.

அதிமுகவும் அப்படியே..

காமராஜர் கூறியது போல் “இரண்டும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்”. சரி இப்போ என்ன ஹிந்தி திணிப்பு நடந்துவிட்டது?

குஜராத், பஞ்சாப் வரை பல மாநிலங்களில் ஹிந்தி மாநிலங்கள் கிடையாது. வடகிழக்கு மாநிலங்கள் அசாம், சிக்கிம் , மேகலாயா பல அப்படியே.

இன்று அனைவரும் நன்கு ஹிந்தி பேசுவர். அது ஹிந்தி காதல் அல்ல. ஒரு இணைப்பு மொழியாக இந்தியா முழுவதும் பயன்படுகிறது.

இங்கே கருணாநிதி குடும்பம் முதல் அனைத்து அமைச்சர்கள் என்று அனைவர் பிள்ளைகளும் ஹிந்தி படிக்கிறார்கள்.

ஆனால் அரசியலுக்கு ஹிந்தி எதிர்ப்பு செய்கிறார்கள்.

அட தேர்வே வேண்டாம். இனைப்பு மொழியாக ஹிந்தியை அனைத்து அரசு பள்ளிகளிலும் படிக்க வைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

பணம் உள்ள அனைத்து குடும்பத்தின் பிள்ளைகளும் தனியாக ஹிந்தி வகுப்பு சென்று படிக்கவில்லையா என்ன?

தனியாக விருப்பபட்டு படிக்கிறார்கள் என்றால் , அதே போல் விருப்பம் இருந்தால் அரசு பள்ளியில் படிக்கும் பிள்ளைகளையும் கூடுதலாக ஹிந்தி படிக்க அனுமதித்து இருக்கலாமே!!!

ஹிந்தியை வைத்து எப்படியாது குட்டையை குழப்பலாம் என்பது திரவிடகழகங்கள் வேலை.

இவ்வளவு பேசும் இந்த இரண்டு கழகமும் ஆங்கிலத்திற்கு வருடம் வருடம் அங்கிகரிக்கபட்ட Dictionary வெளியிடுவது போல் இந்த 50வருட ஆட்சியில் எத்தனை முறை நீங்கள் அந்த வேலையை செய்தீர்?
ஹிந்தி படித்தால் தான் வேலை என்று கூற நான் முட்டாள் அல்ல. ஹிந்தி தமிழை விட உயர்ந்தது என்று எவரும் கூறவும் இல்லை.

ஆனால் ஏறக்குறை 70% மேல் கூடுதலாக ஹிந்தி பேசும் நாடு இது. இனைப்பு மொழியாக மட்டுமே ஹிந்தியை படிக்க விரும்புவதில் என்ன தவறு உள்ளது?

தமிழ்நாடு கன்னியாகுமரி முதல் சென்னை வரை இழக்காமல் காப்பாற்றி கொடுத்த மாபோசி , ராமசுப்பய்யர் போன்றோர் வரலாறு தெரியாது…. அந்த போராட்டம் எதிலும் திக திமுக முயற்ச்சி என்று ஒன்னும் கிடையாது. ஆனால் அதை எப்படி தன் அரசியலுக்கு பயன்படுத்தி கொண்டனர் என்று வரலாறு நன்கு அறிந்தவர் அறிவர்.

இங்கே ஹிந்தி எதிர்ப்பு காட்டி , அதே நேரம் தயாநிதியை ஹிந்தி தேர்வுக்கு தயார் செய்த குடும்பம் தானே இது.

எனவே
“உன் தாத்தா ஏமாற்றபட்டார்;
உன் தந்தை ஏமாற்றபட்டார்;
இப்போ நீங்க?” அவ்வளவு தான்.

தமிழை வளர்ப்பது என்பது ஹிந்தியை வெறுப்பதால் உருவாக்க முடியாது.

முதலில் உலகில் உள்ள சிறந்த அறிவியல் சார் புத்தகங்களையும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து அரசு இனையதளங்களில் PDF புத்தகமாக ஏற்றுங்கள்.

ராக்கெட் செய்வது எப்படி?
துப்பாக்கி செயல்படும் முறையும் உருவாக்கும் முறையும்.
எப்படி செயற்கை கோள்கள் இயங்குகின்றன? அவை தயாரிப்பது எப்படி?
ஒரு தோல் பதனிடும் தொழில்சாலை எப்படி உருவாக்க வேண்டும்.
செல் போன் முதல் டீவி வரை எப்படி நாமே தயாரிப்பது.
அணு முதல் அணுமின் நிலையம் வரை.

இப்படி தொழில் சார்ந்து, அறிவியல் சார்ந்து அனைத்தும் தமிழ்மொழியில் கிடைக்க செய்யுங்கள். 500கோடி செலவு செய்தால் மொத்த அடிபடை அறிவியலும் தமிழில் புரியும்படி அனைத்து சிறந்த அறிவியல் புத்தகங்களும் தமிழுக்கு மொழிபெயர்க்க வேண்டும்.

அறிவியல் வளர்ச்சி இல்லாத வெறும் கவிதை, இலக்கியம் என்று மட்டும் தமிழ் இருப்பதால் எந்த பலனும் அதன் பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லை.

சிலப்பதிகாரம் தொட்டு யசோதாகாவியம் வரை தமிழ் இயல், இசை, நாடகம் என்று உயர்ந்து நிற்பது பெருமையே. ஆனால் தற்காலம் அறிவியல்,தொழில் வளர்ச்சிக்கானது.

எனவே அரசியல், அரசு இரண்டிலும் தில்லுமுல்லு செய்த திமுக எடுத்து உள்ள ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வடிகட்டிய அரசியல். உணர்வை தூண்டி ஆதாயம் தேடும் வேலை.
மீண்டும் கூறுகிறேன்

உன் தாத்தா ஏமாற்றபட்டார்;
உன் தந்தை ஏமாற்றபட்டார்;
இப்போ நீங்க?

அமைச்சர்கள் முதல் அரசு பள்ளி ஆசிரியர்கள் வரை அவர் தம் பிள்ளைகள் எல்லாம் கட்டாயம் ஹிந்தி படிக்க தான் செய்வார்கள். அதை எதிர்த்து கொண்டே.

-மாரிதாஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.