தண்ணீர் பிரச்னையில் ‘தப்பித்த’ சென்னைவாசிகள் இவர்கள்..!

உரத்த சிந்தனை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

stalin singapore2 - 2026தண்ணீர் பிரச்னை தமிழகத்தின் தலையாய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தின் தலைநகரம் தண்ணீர் இன்மையால் தவிக்கிறது. தகிக்கும் வெயில், தண்ணீருக்காகத் தவிக்கும் நிலை என பொதுமக்கள் சிரமத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, அரசியல்வாதிகள் சிலரோ தண்ணீர் பிரச்னை குறித்து வேறு விதமாகப் பேசிக் கொண்டு செல்கின்றனர்.

குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மக்கள் தண்ணீர் பிரச்சனையில் இருக்கும்போது குடும்பத்தினருடன் சிங்கப்பூருக்கு உல்லாச பயணம் மேற்கொண்டுள்ளார். 

“கும்பி கருகுது, குடல் காயுது, குளுகுளு ஊட்டி ஒரு கேடா?”  என்று, ஜெயலலிதா கொடநாட்டில் தங்கி இருந்த போது உண்மை மட்டுமே பேசிக் கொண்டிருந்த கருணாநிதி  அப்போது கேள்வி கேட்டார்.

stalin singapore - 2026தற்போது தண்ணீர் கஷ்டம் தெரியாத அளவுக்கு சென்னையில் சிஐடி காலனியும் கோபாலபுரமும் இருப்பதாகக் கூறுகின்றனர். அதனால்தான் சிங்கப்பூரில் சுற்றுலா சென்றிருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

இதே போல், ‘தண்ணீர் பஞ்சம் இல்லை; வேண்டுமென்றே மிகைப்படுத்துகின்றனர்’ என அமைச்சர் வேலுமணி கூறியுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் குடிநீர் வாரியம் 83 கோடி லிட்டர் தண்ணீரை வினியோகம் செய்து வந்தது. நிலத்தடி நீர் இயல்பாக கிடைத்தவரை இது போதுமானதாக இருந்தது.

தற்போது, நிலத்தடி நீரும் கீழே சென்று விட்டது. நீர்நிலைகளும் வறண்டு விட்டன. இதனால் குடிநீர் வாரியம் தண்ணீர் வினியோகத்தை 52 கோடி லிட்டராக குறைத்துள்ளது.

sp velumani - 2026குடிநீர் வாரிய கணக்குப்படி குடிநீர் விநியோகம் வழக்கத்தைக் காட்டிலும் 32 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரம், நிலத்தடிநீர் இல்லாத நிலையில் 50 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் தவித்து வருகின்றனர்!

சென்னையில் உள்ள ஓட்டல்களில் தண்ணீர் தட்டுப்பாடால் மதிய உணவை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடால் மதிய உணவை நிறுத்தும் நிலை ஏற்படலாம்; அதற்காக மன்னிக்க வேண்டுகிறோம் என ஓட்டல் நிர்வாகங்கள் விளம்பர பலகை வைத்துள்ளன. சில  இடங்களில் சிறு ஓட்டல்கள் தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டுள்ளன.

தண்ணீர் பிரச்னை காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒரு பகுதி ஊழியர்களை வீடுகளில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தி உள்ளது. அலுவலகம் வருவோர் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் கைகழுவ மட்டுமே அனுமதிக்கப் படுகின்றனர். சாப்பாட்டு தட்டு, யுஸ் அன் த்ரோ வகையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் தட்டுகளாகப் பயன்படுத்தப் படுகின்றன.

இவ்வளவு சிரமங்கள் இருந்த போதிலும், தண்ணீர் பிரச்னை என்பது மிகைப் படுத்தப் படுவதாக ஆளும் கட்சியினர் சிலர் கூறுவதும், ரொம்பவே கஷ்டம் உள்ளது என்று எதிர்க்கட்சியினர் சிலர் வெறுமனே அரசியலுக்காகக் கூறுவதும் தமிழகத்தில் தொடர்கதையாகி விட்டது.

1 thought on “தண்ணீர் பிரச்னையில் ‘தப்பித்த’ சென்னைவாசிகள் இவர்கள்..!”

  1. கும்பி எரிகிறது குடல் சாகிறது குஷி சிங்கை அவர்களுக்கு . கடவுள் தான் தண்டிக்கவேண்டும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.