கர்நாடகம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி!

இந்தியா சற்றுமுன்

yediyurappa win - 2026

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா வெற்றி பெற்றார்.

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவின் சார்பில் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றிருக்கும் பி எஸ் எடியூரப்பா வெற்றி பெற்றுள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றியின் மூலம் தனது பெரும்பான்மை பலத்தை சட்டமன்றத்தில் எடியூரப்பா நிரூபித்திருக்கிறார். இதனிடையே கர்நாடக சட்டமன்ற சபாநாயகர் ரமேஷ்குமார் பதவி விலகியுள்ளார்.

karnataka rameshkumar - 2026நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது சபாநாயகராக இருக்கும் ரமேஷ் குமார் பதவி விலகியுள்ளார்! சபாநாயகர் பதவி விலக வில்லை என்றால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு பாஜக முன்னர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது!

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து வெற்றி பெறும் பட்சத்தில் சபாநாயகர் ராஜினாமா கடிதம் கொடுத்த எம்எல்ஏக்கள் கடிதத்தின் மீது எந்த முடிவும் எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது! இந்தநிலையில் சபாநாயகர் தாமே பதவி விலகியுள்ளார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.