அன்யோன்யமாய் நடித்து அசத்தியிருக்கும் வித்யா பாலன் !

சினி நியூஸ் சினிமா
vithyabalan1 - 2026உலகம் முழுவதும் உள்ள தல ரசிகர்கள் மட்டுமன்றி தளபதி ரசிகர்களையும், அனைத்து சினிமா விரும்பிகளையும் உற்று நோக்க வைத்திருக்கும் படம் தான் நேர்கொண்ட பார்வை. நாளை உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது.

கடந்த பொங்கல் திருநாளில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த விஸ்வாசம் படம் தல அஜீத் நடித்த படங்களிலேயே அதிக வசூல் செய்து சாதனை படைத்த படம்.

இந்தப் படம் வெளிவந்த சில நாளிலேயே பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான நேர் கொண்ட பார்வை படத்தில் நடிக்கப் போகிறார் என்றும், அது தீபாவளிக்கு முன்பாகவே வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் தல ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே இந்தப் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

எச் வினோத் இயக்கியுள்ள நேர்கொண்ட பார்வை 2016ல் வெளியான பாலிவுட் படமான பிங்கின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் ஆகும். வக்கீல் வேடத்தில் தல அஜித் மற்றும், ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிக் பாஸ் புகழ் அபிராமி வெங்கடச்சலம் மற்றும் ஆண்ட்ரியா தாரியாங் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் அஜித் மற்றும் வித்யா பாலன் இருவரும் இடம் பெற்றுள்ள ஒரு காட்சி வெளியாகி உள்ளது. இதை வித்யா பாலன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புதிய காட்சியில் இருவரும் மனதைக் கவரும் உறவைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.vithyabalan - 2026பிங்க் படத்தில் அமிதாப்பிற்கும் அவரது மனைவிக்கும் அதிகமாக காட்சிகள் இல்லை. ஆனால் நேர்கொண்ட பார்வை படத்தில் தல அஜீத் ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பட வெளியீட்டிற்கு சில நாட்கள் முன்னதாக சால்ட் அண்ட் பெப்பரில் இருந்த தல அஜீத், முழுவதுமாக சால்ட் லுக்கிற்கு ப்ரமோட் ஆகி விட்டார். அஜித் அழகாக இருக்கிறார்.

அந்த கிளிப் இரண்டு கதாபாத்திரங்களுக்கிடையில் இனிமையான, விளையாட்டுத் தனமான மற்றும் மனதைக் கவரும் தருணங்களால் நிரம்பியுள்ளது. அதோடு திருமணமான தம்பதிகளாக அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பற்றி காட்டுகிறது.

இதற்கு முன்னதாக அஜித்துடன் நடிப்பது குறித்து ஊடகத்திற்கு பேட்டி அளித்த வித்யாபாலன், மக்களின் மனதை கொள்ளையடித்த நடிகர், எனக்கு முன்னால் மிகவும் எளிமையாக நிற்கிறார் என்று என்னால் நம்ப முடியவில்லை.

உண்மையைச் சொல்வதானால், நான் அவரது பிம்பத்துடன் நடிப்பது போல உணர்ந்தேன். அவர் அந்த அளவு எளிமையானவர். நான் அவரிடம் பேசியபோது, அவர் வெட்கப்பட்டார், என்று கூறினார்.

அசல் இந்தி படத்தில் அமிதாப் பச்சன், டாப்ஸி பன்னு, கீர்த்தி குல்ஹாரி மற்றும் ஆண்ட்ரியா தாரியாங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் ரீமேக்கில், அமிதாப்பச்சன் கேரக்டரில் அஜித் நடித்துள்ளார். இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தாரியாங் ஆகியோரும் நடிக்கின்றனர். அது மட்டுமின்றி இந்த படம் போனி கபூரின் முதல் தமிழ் திரையுலக தயாரிப்பாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.