
சிம்ம ராசி
காலபுருஷ தத்துவத்தின்படி ஐந்தாவது ராசி சிம்ம ராசி. இந்த ராசிக்கு ஐந்தாமிடத்தில் குரு ஆட்சியாக உள்ளார் அதனால் இந்த ஆண்டில் இந்த ராசியினருக்கு நல்ல யோகம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உண்டு.
அதிலும் குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு குழந்தை கிடைக்கக்கூடிய நல்ல காலம் என்றே சொல்லலாம். தனது நேர் பார்வையாக ராசியின் லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால், அங்கே ராகு சுபத்துவம் அடைகிறார் அதனால் இந்த ஆண்டு இவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடிய ஆண்டாகவே மாறப்போகிறது.
குரு தனது ஐந்தாம் பார்வையால் ராசியின் ஒன்பதாம் இடத்தைப் பார்ப்பதால் தந்தை வழி உறவினர்களுடன் நல்ல அன்பு பாராட்டுதல் ஏற்படும். குரு தனது 9ம் பார்வையால் ராசியைப் பார்ப்பதால், உடல்ரீதியான பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து பூரண ஆரோக்கியம் கிடைக்கும்.
வருகிற ஜனவரி மாதம் நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சி, சனியானவர் இவர்களுக்கு ஆறாமிடத்தில் ஆட்சியாக உள்ளார் இதுவும் இவர்களுக்கு ஒரு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். இதுநாள் வரை இருந்த பிரச்சனைகள் எல்லாம் குறைந்து நல்ல நிலை ஏற்படும்.
ஐந்தாம் இடத்தில் குரு ஆட்சியாக இருப்பதால், மாணவர்கள் சிறப்பாக படிக்கக்கூடிய காலகட்டமாக அமையும். இந்த ஆண்டு இறுதியில் குரு ஆறாம் இடத்தில் மறைந்து நீசபங்க யோகம் அடையப் போவதால் அந்த காலகட்டத்தில் ஒரு சில பிரச்சனைகள் வரக்கூடும்.
மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி அந்த அளவுக்கு நல்ல பலன் தராது. இதுநாள் வரை லாபத்தில் அமையப்பெற்ற ராகு, ஆண்டு இறுதியில் பத்தாம் இடத்திற்கு பெயர்ச்சியாகிரார். அதுபோல கேது பகவான் 4-ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகிரார். அந்த காலகட்டத்தில் சிம்ம ராசியினருக்கு பொருளாதாரத்தில் சில சரிவு நிலை ஏற்படலாம்.
தாயார் மற்றும் தாயார் வழி சொந்தங்களுடன் சில பிரச்சினைகளும் வரக்கூடும். சொந்த வீடு வண்டி வாகன விஷயங்களில் சில பிரச்சனைகளையும் சந்திக்கலாம். சிம்ம ராசிக்கு இந்த ஆண்டு பங்கு சந்தையில் நல்ல லாபம் தரக்கூடிய ஆண்டாகவே அமையக்கூடும். அதுபோல சொந்த வீடு மனை மற்றும் இடங்களை விற்று அதன் மூலமாக லாபம் தரக்கூடிய ஆண்டாகும் இருக்கும்.
இந்த கிரக நிலைகள் எல்லாம் வைத்து பார்க்கும்போது சிம்ம ராசிக்கு சுமார் 90 லிருந்து 95 சதம் வரை நல்ல பலன் கிடைக்கும்
இந்த ராசியின் பலாபலன்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
நம் தினசரி இணைய வாசகர்களுக்காக…. 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு பலன்களை கணித்துத் தந்திருப்பவர் ஜோதிடர் கி.சுப்பிரமணியன்!
கி. சுப்பிரமணியன், ஜோதிட கலையை தமது தந்தையார் கிருஷ்ணன் ஐயரிடம் இருந்தும், பாலக்காட்டில் மிகப் பிரபல ஜோதிடராக விளங்கிய தமது மாமா மணி ஐயரிடமும் சிறிய வயதிலேயே கற்றுக்கொண்டவர்.
ஜோதிட நுணுக்கங்களை மற்றவர்களுடன்பகிர்ந்து கொள்வதற்காக, யூடியூபில் (Youtube) சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். ஆன்மிக இதழ்கள், இணையதளங்களில் ஜோதிடக் குறிப்புகள், ராசிபலன்களை எழுதி வருகிறார்.
ஜோதிடர் கி. சுப்பிரமணியன்
தொடர்பு எண்: 8610023308
மின்னஞ்சல் முகவரி : Ast8610023308@gmail.com



