பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளின் தொடர்பு துண்டிப்பு: இஸ்ரோ!
செயற்கைக்கோளில் உள்ள மின்சாதனத்தில் கோளாறா, அல்லது மின்மோட்டாரில் சிக்கலா, ஆன்டனாவில் இருந்த சிக்னல்கள் அனுப்புவதில் பிரச்சினையா என்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். இது விஞ்ஞானிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூட்ரினோ மலைப்பகுதியில் போலீஸார் குவிப்பு!
பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தவுள்ளதாக வந்த தகவலையடுத்து மலைப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக அம்பரப்பர் மலையில் ஏறி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தியிருந்தனர்.
ஆவணமின்றி கர்நாடகத்தில் பிடிபட்ட ரூ.1 கோடி!
கர்நாடகாவில் மே 12-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம், தங்கம், மதுபானம் கொண்டு செல்லப்பட்டதாக சந்தேகம் அடைந்து சோதனை நடைபெற்றது.
டீக்கடை மோடிக்கு ஒரு டீக்கூட கிடைக்காது!: கடையடைப்பு அன்றுதானாம்!
அப்போ பிரதமருக்கு டீ கிடைக்காதா? என்று கேள்வி கேட்கும் வகையில், தமிழகத்திற்கு மோடி வருகையின் போது கடையடைப்பு நடத்தப்படும் என வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
வாய் கூசாமல் பொய் பேசிய ஸ்டாலின்: அப்துல் கலாம் நியூட்ரினோவை எதிர்த்தாரா?
உலகத் தலைமையை மீட்டெடுத்தல், கனிம வளங்களைப் பெறுதல் என்றெல்லாம் கலாம் குறிப்பிடுவதுதான் இந்தத் திட்டத்தை எதிர்ப்பதற்கு சில குழுக்களுக்கு தூண்டுகோலாக இருந்துள்ளது என்பது, கலாம் கட்டுரையைப் படித்த பின்னர்தான் தோன்றுகிறது.
தி.க.காரர் சொல்வது போல்… மோடி அரசிடம் அப்துல் கலாம் கப்பம் வாங்கினாரா?
அறிவியல் சார் தொழில்நுட்ப வளர்ச்சி சார் திட்டம். பகுத்தறிவுப் பட்டறையில் பட்டை தீட்டிய அறிவியல் அறிஞர்களால்தான் அதனைப் புரிந்து கொள்ள முடியும். அதனால்தான், அப்துல் கலாம் இத்திட்டம் குறித்து திடமாக, ஆய்வு நோக்கில் ஆதரித்து எழுதினார். பக்கம் பக்கமாக எழுதினார்.
திமுக., எம்.பி.க்கள் முதலில் ராஜினாமா செய்யட்டும்: தமிழிசை!
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி பிரச்னையை தீர்க்க மத்தியில் இருந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் இருந்த போது நடவடிக்கை எடுக்காதது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.
மெரினாவில் போராட்டம் நடத்திய 4 பெண்கள் உள்பட 15 பேர் கைது!
மெரினாவில் 30க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் போராட்டம் நடத்திய புகைப்படம் ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து அவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையை துவக்கி, அவர்களை போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது ஏன்? முதல்வர் விளக்கம்
உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் போடப்பட்டது என்பது குறித்து முதல்வர் விளக்கம்
மதுரையில் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக நிர்வாகி தீக்குளிப்பு!
பொன்மேனி என்ற இடத்தின் அருகே நடைப்பயணத்தில் வந்தவர்கள் சென்ற போது, வைகோவின் நடைப் பயணத்தால் என்ன பயன் விளையும் என அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த மதிமுக தொண்டர்கள் அவரை அடித்து விரட்டினர்.
காவிரி அரசியல்: சித்தராமையாவுக்கு ‘அழுத்தம்’ கொடுக்குமா திமுக.,!?
எனவே, திமுக., இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்று, கர்நாடகத்தைக் கண்டிக்காத காங்கிரஸின் கூட்டணியில் இருந்து வெளியே வரவேண்டும்...; சித்தராமையாவை கண்டிக்க வேண்டும்! மத்திய அரசுக்கு எதிராகப் போராடும் போது, கூட்டணிக் அட்சி காங்கிரஸின் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராகவும் போராட வேண்டும். அதுதான் காவிரிக்கான திமுக.,வின் உண்மையான போராட்டமாக இருக்கும்!
பாஜக.,வில் சேருமாறு அழைத்த அமித் ஷா; அதிர்ச்சி அளித்த மைசூர் மன்னர் வாரிசு!
குடும்ப வாரிசான இளவரசர் யதுவீர் கிருஷ்ண தத்த சாம்ராஜ உடையாரும் தாம் எந்த அரசியல் கட்சியிலும் சேரப் போவதில்லை என்று கூறிவிட்டாராம். இதனால் எதிர்ப்பார்த்துப் போன பாஜக.,வினர் ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
