பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஏப்.2ல் ஓபிஎஸ் உண்ணாவிரதம்
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் போன்ற ஒன்றை அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது உச்ச நீதிமன்றம். ஆனால் அது கொடுத்த 6 வார கால கெடு முடிவடைந்த நிலையில் மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு மட்டத்திலும் அழுத்தம் கொடுக்கப் பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
பங்குனி உத்திர நன்னாள் : சிறப்பு மிகு கல்யாணத் திருநாள்!
தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் சிவனார் உயிர்ப்பித்தது பங்குனி உத்திரம் திருநாளில்தான்.
தமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் பாஜக.,வுக்கு இல்லை: தண்டோரா போடும் தமிழிசை
தமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் பாஜக.,வுக்கு சிறிதளவும் இல்லை என பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
மேலாண்மை வாரியம்: மத்திய அரசின் நிலைப்பாட்டில் உள்ள நியாயங்கள்!
இப்படியாக, மத்திய அரசின் குழப்ப நிலையை முன்வைத்து மத்திய அரசின் செயலை நியாயப் படுத்தி முன் வைக்கப்படும் இன்னொரு கருத்து:உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொன்னது என்று தமிழ் ஊடகங்கள் ஒரு செய்தியைப் பரப்பியுள்ளன.
விருகம்பாக்கம் ஐஓபி., வங்கி கொள்ளையன் நேபாளத்தில் சிக்கினான்!
இந்நிலையில் நேபாளத்தில் பதுங்கி இருந்த கொள்ளையன் சபிலால் என்பவனை போலீசார் கைது செய்தனர். நேபாளத்தில் பதுங்கி இருந்த சபிலாலை, சர்வதேச போலீசார் இண்டர்போல் உதவியுடன் கைது செய்தனர்.
செங்கோட்டை புனலூர் வழியாக ரயில் சேவை தொடக்கம்!
இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம் , விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பகவதிபுரம், தென்மலை, எடமண், புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரை ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
வைகாசி மாதத்தில் திருமணம் செய்யலாமா?
இரண்டாவது விதியில் சொல்லப்பட்டுள்ளபடி வைகாசி மாதம் முழுவதும் செவ்வாய் உச்சம் பெற்றிருக்கிறார். அதனாலும் இம்மாதத்திற்கு மலமாத அதிமாத தோஷம் கிடையாது.
தேசிய கீதத்துக்கு நாடாளுமன்றத்தில் பார்வையாளர்கள் எழுந்து நிற்க அனுமதி மறுக்கப் படுவதேன்?: இல.கணேசன் கேள்வி
பாராளுமன்றத்தில் தேசிய கீதமோ, வந்தே மாதரமோ இசைக்கப்படும் போது பார்வையாளர்கள் எழுந்து நிற்க அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்களும் நம் நாட்டு மக்களே. அவர்களும் தேசத்தை வணங்க அனுமதிக்க வேண்டும், இல்லாவிடில் இதையே சிலர் தவறான முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்ட வாய்ப்புண்டு. இதைச் சரி செய்ய வேண்டுகிறேன்- என்று அவர் பேசினார்.
திருவாமாத்தூரில் தேர்த் திருவிழா கோலாகலம்!
தொடர்ந்து பஞ்சமூர்த்திகளும் தேரில் அலங்கரிக்கப்பட்டு தேரின் நான்கு சக்கரங்களுக்கும் பூஜைகள் செய்விக்கப்பட்டு தேரினை பராமரிக்கும் நபர்களுக்கும் பரிவட்டம் கட்டப்பட்டு சுமார் 8 மணியளவில் தேர் பொதுமக்கள் அரோகரா, அண்ணாமலையாருக்கு அரோகரா போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டு இழுக்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் பாஜக., பிரமுகருக்கு அரிவாள் வெட்டு!
ரத்த வெள்ளத்தில் மிதந்த வீரபாகு உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பேத்கருடன் ‘ராம்ஜி’ என்ற பெயரையும் சேர்த்து அழைக்க உ.பி. அரசு உத்தரவு!
இந்திய அரசியல் சாசன பக்கங்களில் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார் என்றும், அதே போல் இனி அவரது பெயரை குறிப்பிட வேண்டும் என்றும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
வினாத்தாள் வாட்ஸ்அப்பில் லீக் ஆன சர்ச்சை: 2 தாள்களுக்கு மறு தேர்வு என சிபிஎஸ்இ அறிவிப்பு
இந்நிலையில், 12ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 10ம் வகுப்பு கணித தேர்வு மீண்டும் நடைபெறும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு நடைபெறும் நாள் ஒருவாரத்திற்குள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
