
மீண்டும் ஒரு பயணம் பஞ்சாப் மாநிலத்திற்கு….
வரும் ஜனவரி 26 ஆம் தேதிக்கு முன்பாக மீண்டும் ஒரு முறை, நேற்று முன்தினம் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற இருந்து… தள்ளி போடப்பட்ட இருக்கும் அதே கூட்டத்திற்கு செல்ல பிரதமர் முனைப்புடன் செயல்பட்டு கொண்டு வருகின்றார் என்பதாக தகவல்கள் கசிய ஆரம்பித்து விட்டது.
இது நமது பாரதப் பிரதமரின் குணம் பற்றி அறிந்தவர்களுக்கு பெரிய விஷயமாக தெரியாது. காரணம் ஆரம்ப கால தொன்னூறுகளில் விபிசிங் அமைச்சரவையின் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த முப்தி முகமது சையதின் பொறுப்பில்லாத செயல்பாடுகளால் காஷ்மீர் மாநிலத்தில் பண்டிட்டுகள் சுமார் மூன்று லட்சம் பேர் சொந்த மண்ணில் அகதிகளாக வெளியேறினார்கள்….. குளிரில் வதங்கி பலர் மடிந்தார்கள். துளிர் விட்டு கொழுத்து திரிந்து இஸ்லாமிய ஜிகாதிகள் கூட்டம்….. காஷ்மீரில் இந்திய தேசிய கொடியை ஏற்றி பாருங்கள் ……. பிறகு தெரியும் சங்கதி என பொது வெளியில் சவால் விட….. பகிரங்கமாக சங்-பரிவார் அறைகூவல் விடுத்து களத்திற்கு வந்தது. இது நடந்தது 1991 ஆம் ஆண்டு.
அதே 1991 ஆம் ஆண்டு காஷ்மீரில் கொடியேற்றும் வைபவம் தொடங்கி வைக்கப்பட்டது. டிசம்பர் மாதத்தில் கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடிவடைந்து இறுதியில் இந்திய தேசிய கொடியை ஏற்றுவதாக திட்டம் வகுக்கப்பட்டது. சொன்னது போலவே 1992 ஜனவரி மாதம் 26 ஆம் தேதி இந்திய குடியரசுத் தினத்தில்…. காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற லால் சௌக் மைதானத்தில் இந்திய தேசிய கொடியை முரளி மனோகர் ஜோஷி ஏற்ற உடன் இருந்த மற்றொருவர் தான் இன்றைய பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி.
அந்நாளில் இது மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது….. அந்த அளவிற்கு அழிச்சாட்டியங்களை கட்டவிழ்த்து விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர் ஜிகாதிகள்….. ஒன்றல்ல இரண்டல்ல சற்றேறக்குறைய சுமார் நாற்பது ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறித்து கொண்டு அப்பாவி இந்துக்களை ஓட ஓட விரட்டி அடித்தனர்… இங்கு உள்ள ஒருத்தரும் வாயே திறக்கவில்லை.. இதற்கு தான் இந்த உள்துறை அமைச்சர் முப்தி முகமது சையது நேரிடையாக உதவி செய்ததாக பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்தன….

மீண்டும் ஒரு முறை காஷ்மீர் கந்தர் கோலம் ஆனது.
சுதந்திர இந்திய சமயத்தில் எழுந்த கலகக்கார கும்பலின் அட்டூழியங்களை….. அன்று காஷ்மீரில் இருந்த RSS அமைப்பினர் தான் அடக்கி ஆண்டு வழிக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்….. இந்திய விமானப் படை விமானங்கள் காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீ நகர் பகுதியில் தரை இறங்க வழி ஏற்படுத்தி கொடுத்து….. இந்திய ராணுவ வீரர்களுடன் தோளோடு தோள் நின்று சண்டை செய்து இருக்கிறார்கள். இவை ஆவணப்படுத்தப்பட்ட நிஜங்கள்…. இதற்காகவே அந்த ஆண்டின் ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்ள செய்து நேரு கௌரவித்ததாக தகவல்கள் உண்டு.
90 களின் இவர்களின் அரசியல் கோலாட்டம் இந்த 92 ஆம் ஆண்டு காஷ்மீர் லால் சௌக் கொடியேற்றம் வரை தொடர்ந்தது.
இது அந்த சமயத்தில்…..
நம் தமிழகத்தில் ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி வெளியான மணிரத்னத்தின் #ரோஜா திரைப்படத்தில் ஒரு மார்க்கமாக காட்சி படுத்தி இருந்தார்கள்……. படம் சக்கை போடு போட்டது….. இந்தியாவில் வரலாற்று சாதனை படைத்தது. காரணம் அதன் தாக்கம் அப்படி பட்டது. ஆனால் அதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பூடகமாக தகவல்கள்… அந்நாளைய அரசியல் தந்திரங்கள் எவையும் இங்கு இருந்த பலருக்கும் தெரியவில்லை….. அல்லது புரியவில்லை.
மத்திய அமைச்சரின் மகள் கடத்தப்பட்ட பின்னர் தீவிரவாதிகளை விடுவித்து அவர் மீட்கப்பட்டதை விமர்சனம் செய்து காட்டப்படும். இது நிஜத்தில் நடந்த விஷயம்…. ஒரு மாதிரியான கண்ணாமூச்சி ஆட்டம்.
படத்தில் சொன்ன அந்த மத்திய அமைச்சர் தான் முன்னாள் உள்துறை முப்தி முகமது சையது. அவரது மூன்றாவது மகள் ரூபையா சையது தான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பின்னர் ஐந்து படுபயங்கர ஜிகாதிகளை விடுவித்து அவரை மீட்டிருந்தது அன்றைய நரசிம்ம ராவ் அரசு. இதே முப்தி முகமது சையதின் மற்றொரு மகள் தான் மெஹபூபா. காஷ்மீரின் பத்தாவது முதலமைச்சர். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விலக்கி கொண்ட போது ரத்த ஆறு ஓடும் என கொந்தளித்த நாற்பதாவது நிமிடத்தில் வீட்டு காவலில் வைத்து நம்மவர்கள் அதிரடித்திருக்கிறார்கள்.

போகட்டும் நம் விஷயத்திற்கு வருவோம்.
பல இக்காட்டான தருணங்களில் எல்லாம் துணிச்சலாக முடிவு எடுத்து திறமையாக செயல்பட்ட ஒருவரிடத்தில் போய்….. பயந்து… பணிந்து… என்பது போன்ற வார்த்தைகளை ….. வார்த்தை பிரயோகங்களை உபயோகித்தால்….. அதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கும்….
கண்ணாடி கூண்டுகளுக்கு பின் நின்று கொடியேற்றி அறிக்கை வாசிக்கும் பிரதமர் இவரில்லை என்பது இங்கு உள்ள பலருக்கும் புரியவில்லை…… சொன்னாலும் புரிந்து கொள்ளும் அளவிற்கு பக்குவ படவில்லை.
அன்று ஆரம்பித்த சரித்திரம் மீண்டும் திரும்புகிறது…. கொஞ்சம் மாறுதல்களுடன்….. சில பல மாற்றங்களுடன்……
இந்திய குடியரசுத் தினத்திற்கு முன்பாக மீண்டும் ஒருமுறை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அதே இடத்திற்கு…. அதே பொது கூட்டத்தில் கலந்து கொண்டு…… முன்னரே அறிவிக்க திட்டமிடப்பட்ட சுமார் 45,000 கோடி ரூபாய் நல திட்டங்கள் வழங்கி விட்டு இந்திய குடியரசுத் தினத்தில்…. கடந்த ஆண்டு போலில்லாமல் செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு….. பிறகு நம் தமிழகத்திற்கு வருகை தரும் விதத்தில், பிரதமரின் பயணத்திட்ட மாறுதல்கள் இருக்கும் என்கிறார்கள்.
அதாவது 1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி….. 1992 ஆம் ஆண்டு காஷ்மீரில் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி இந்திய தேசிய கொடியை பறக்க விட்டது போலவே…. இவ்வாண்டு…. 2022 ஆம் ஆண்டில் பஞ்சாப்….. குடியரசுத் தின நிகழ்வுகள் …….. தமிழக வருகை…….. என திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆக…. நேற்று முன்தினம் நடந்த சம்பவம் மீண்டும் ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வுகளுக்கு அச்சாரமாக…. நம் மக்கள் மறந்து போன விஷயங்களை மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்தி பார்க்க ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது.
நேற்று முன்தினம் சம்பவமே பலத்த அதிர்வலைகளை பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமல்லாமல் நாடெங்கும் உண்டாக்கி இருக்கிறது….
இந்த சமயத்தில் மீண்டும் ஒரு பயணம் என்பது அங்கு மிகப்பெரிய அளவிலான எதிர்ப்பார்ப்பை.….. மறைமுகமாக அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சியின் மீது பயங்கர அழுத்தங்களை உண்டாக்கிடக்கூடும் என்று பல சீனியர் காங்கிரஸ் கட்சியினர் புலம்ப ஆரம்பித்து இருக்கிறார்கள். இது புரியாமல் அக்கட்சியின் விடலைகள் சில ட்விட்டரில் ட்விட்டிக்கொண்டு இருக்கிறார்கள்…. இந்த லட்சணத்தில் இவர்களை…. கரூர் அரவாங்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினராக வேறு தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெண்கள் சாலையெங்கும் உள்ள சுவரொட்டி மற்றும் விளம்பர பதாகைகளை கிழித்தெறிந்து பந்தாடி வருகிறார்கள்…. துணை முதல்வரை வழிமறித்து கேரா செய்து அதகளம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்….. நேற்று முன்தினம் வரை பஞ்சாப் மாநிலத்தில் பத்து இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறுமா என நினைத்துக்கொண்டு இருந்தவர்கள் மத்தியில் சுலபமாக நாற்பது இடங்களுக்கு மேல்…… என உயர்த்திவிட்டுள்ளது இந்த சம்பவம்.
பொறுத்தார் பூமி ஆள்வார்….. அந்த பொறுமைக்கும் எல்லை உண்டு. ஏற்கனவே எல்லை மீறி சென்று விட்டார்கள்….. எல்லை மாநிலம் என்பதால் சற்றே நாசூக்காக பின்வாங்கி செயல்பட்டவர்களை…. ரௌத்திரம் கொள்ள செய்து இருக்கிறார்கள் சீக்கியர்கள் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு இருக்கும் காலிகள். காலி பண்ணாமல் விடப் போவதில்லை. ஏற்கனவே காவிகள் பொல்லாதவர்கள்……… பயங்கரவாதிகள் என்று புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
– ‘ஜெய் ஹிந்த்’ ஸ்ரீ ராம்