
எல்லையில் சீனாவை எதிர்க்கிறதா இந்திய ராணுவம்.? அதற்கும்ம்ம்ம் மேல…- என அர்த்தபாவனையுடன் சிரிக்கிறார்கள் நம் இந்திய வீரர்கள்.
தற்போதைக்கு அருணாசலம் பகுதியில் உள்ள டோக்லாம் பகுதியில் வைத்து சீன ராணுவம் ஊடுருவல் செய்து விட்டதை இந்திய தரப்பில் மறைத்து விட்டதாக ஊடகங்கள் புருடா விட்டு கொண்டு இருக்க…….. நிஜத்தில் என்ன நடந்தது என்பதை குறித்தான பறவை பார்வை இந்த பதிவு.
👉நீண்ட நெடுக பரவியிருக்கும் இந்திய சீன எல்லையில் எங்கு வைத்து சீன ராணுவத்தினரை சந்திக்கபோகிறார்கள் நம் இந்திய வீரர்கள் அல்லது இந்தியாவிற்கு சாதகமான தளம் எது? இதனை இங்கிருந்து தொடங்கி பார்ப்போம்.
2019 ஆண்டு ஜூன் மாதத்தில் சீனா லடாக் எல்லையில் உள்ள கல்வான் மோதலுக்கு பிறகே இரு தரப்பினரும் தமது படைபலத்தை இந்த பிராந்தியத்தில் அதிகரிக்க தொடங்கி இருக்கிறார்கள் என்று நம்மவர்கள் பரவலாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.
அது தவறு.
இந்தியா 2017 ஆம் ஆண்டு முதலே இதற்கான ஆய்தபணிகளை செய்து வந்தது. இதற்கு காரணமும் சீனா தான்.
சீனா தொடர்ந்து பல காலமாக அருணாசலப் பிரதேசம் எங்கள் எல்லைக்குள் வரும் சீன பகுதி என விடாமல் தொடர்ந்து பேசி வருகிறார்கள். 2007-08 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சீனா இங்கு உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையை தங்களின் கை பொம்மையாகவே மாற்றி வைத்து விளையாட்டு காட்டி வந்தனர். இவையனைத்தும் 2014 ஆம் ஆண்டு காலக்கட்டத்திற்கு பிறகு மாற துவங்கியது.
இந்திய எல்லையில் அத்துமீறி அட்டகாசம் செய்து வந்த சீன ராணுவத்தினரை முற்று முழுதாக விலக்கி வைக்க திட்டங்கள் தீட்டப்பட்டது. இதனை செய்ய தூண்டியதும் சீன ராணுவம் தான். அவர்கள் டோக்கலாம் பகுதியில் டேரா போட்டு 2017 ஆம் ஆண்டு செய்து வந்த அழிச்சாட்டியம் தான் மிக முக்கியமான காரணம்.
இந்தியா தனது ராணுவ துருப்புக்களையும் ஆயுதங்களையும் அவற்றை இடமாற்ற தோதான சாதனங்களையும் உலக அளவில் தேடி தேடி வாங்க துவங்கியது.
அந்த சமயத்தில் அமெரிக்க போயிங் நிறுவனம் சிலபல காரணங்களால் நிதி நெருக்கடியின் சிக்கி திண்டாடி வந்தது. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்து ஓர் ஆண்டு பூர்த்தியான சமயம் அது. இந்திய அமெரிக்க நல்லுறவு துளிர் விட்டு மேம்பாடு அடைந்து வந்து சமயம் போயிங் டாடா நிறுவனம் இணைந்து பணியாற்ற தொழில்நுட்ப பரிமாற்றம் செய்து கொள்ள ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை ஓடிக் கொண்டு இருந்தது.
அவர்களின் அற்புதமான ஹெலிகாப்டர் ரகங்களை வாங்க இந்தியா விரும்பியது. அதற்கான தேவையும் இருந்தது. அவர்கள் வசம் கேட்பாரற்று இருந்த சினூக் ரக ஹெலிகாப்டர்களை சல்லிசாக வாங்கி குவிக்க தொடங்கியது. அப்பாச்சி ஹெலிகாப்டர், C17 முதல் C170J வரை வாங்கியது இந்தியா. இவையனைத்துமே கார்கோ விமானங்கள்.
இந்த ரக போயிங் நிறுவன கார்கோ விமானங்களை பொத்தி பொத்தி வைத்து கொண்டு இருந்தார்கள் அவற்றை வாங்கிய சிலபல நாடுகள்.
இந்தியா மாத்திரமே அதிரடியாக லடாக்கில் உள்ள #டௌலத்பெக்ஹோடி எனும் உலகின் அதிக உயரமான பீடபூமியில் தரை இறக்கி பதைபதைக்க வைத்து அதிரடித்தது. அதிர்ந்து போனார்கள் அமெரிக்க போயிங் நிறுவனத்தார். ஆனால் நடந்த கதையே வேறு…. இதனை பார்த்த பல நாடுகள் தங்களுக்கும் இந்த விமான ரகம் வேண்டும் என கேட்டு போயிங் நிறுவனத்தாரை திக்குமுக்காட செய்து விட்டனர் என்பது வேறு விஷயம்.
ஆனால் ஒரு நாடு மாத்திரம் பார்த்து உள்ளூர புகைந்துக் கொண்டு இருந்தது. குறித்து வைத்துக் கொண்டது. சீண்ட ஆரம்பித்தது. ராணுவ வீரர்களின் அத்துமீறலை கண்டும் காணாமல் இருந்தது. அது சீனா…
அமைதி காக்க சொன்னது இந்திய ராணுவம். சமயம் வரும் வரை காத்திருக்க சொன்னது. அப்படி வரும் போது கனகச்சிதமான செயல் பட பயிற்சி கொடுத்தது.
அதற்கு முன்பாக ஒரு முறை சமாதானமாக பேசி பார்க்க ஒரு சந்தர்ப்பத்தை மகாபலிபுரத்தில் வைத்து ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால் அவர்கள் அதனை ஏளனம் செய்தனர். இங்கிருப்பவர்களை விட்டே ஏகடியம் பேச விட்டது.
ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு.
ஆம்…… அந்த தருணமும் வந்தது…. வந்தார்கள் அவர்கள்… அப்படி தொக்காக வந்து மாட்டினார்கள் மடையர்கள்….. வந்த சீன ராணுவத்தினரை வெறும் கைகளாலேயே அடித்து தொம்சம் செய்து கீழித்தெறிந்து ஓடும் ஆற்றில் விட்டெரிந்தனர் நம் இந்திய ராணுவத்தினர்.
கல்வான் மோதல் என்பது இது தான்.
ஒரு கணம் உலகம் ஆடிப் போய் நின்றது. இந்தியாவா இது என கண்களை கசக்கி கொண்டு பார்த்தது. அதன் பின்னர் தான் அவர்களுக்கு பல மாதங்களாக காத்திருந்த இந்திய ராணுவத்தினரின் கட்டுக்கோப்பான தவம் புரிந்தது….. எல்லையில் அவர்களின் பலம் தெரிந்தது….. நாட்டை ஆண்டு கொண்டு இருந்தவர்களின் வீர்யம் வெளிப்பட்டது.
இது ஒன்றும் ஒரு நாள் கூத்து அல்ல…. நாளைய உலகின் ராஜாங்கம் இவர்களுடையது தான் என ஒவ்வொன்றாக தெரிய துவங்கி, உலகத்தவருக்கு புரிய வந்து வாயடைத்து நின்ற அற்புதமான தருணம் அது.
ஏதோ உசத்தியாக சொல்லவேண்டும் என்கிற ரீதியிலான வார்த்தை பிரயோகம் அல்ல இது…… இந்திய எல்லையில் நம் ராணுவத்தினரின் உயரத்தை அவர்களுக்கு அருகில் எட்ட நின்று பார்த்து சொல்லும் நிஜமான விஷயம்.
2040 ஆம் ஆண்டு சீனா தான் இந்த உலகையே ஆளப்போகிறது என்று நித்தம் நித்தம் அலட்டலாக சொல்லி வந்த சீனாவை இடது கையால் தட்டி தூக்கிய தீரம் நம்மவர்களுடையது. இதனை நாம் கொண்டாடாமல் வேறு யார் கொண்டாடுவர்.
இந்திய ராணுவத்தினரோடு சேர்ந்த இந்திய ராஜதந்திரம் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் பார்த்து விடுவோம் வாருங்கள்….. பிறகு நீங்களே சொல்வீர்கள் இங்கு சொன்ன வார்த்தை வெறும் முகவரிக்கு கூட காணாது என்று.
கடந்த காலத்தில் இந்திய எல்லையில் மோதலின் போது ஓடோடி வந்து நின்ற அமெரிக்க படைகளை வேண்டாம் என்று சொல்லாமல் சொன்னது இந்தியா. ஆனால் அவர்களின் ராணுவ சாதனங்களை…. உபகரணங்களை வேண்டாம் என சொல்லவில்லை. அதற்காக அத்தனையையும் வாரி குவித்துக்கொள்ளவில்லை……. தேர்ந்தெடுத்து ரகம் வாரியாக சேகரித்துக்கொண்டார்கள்.
⭕ சரி இவற்றை தற்போது எங்கு வைத்திருக்கிறார்கள்??????
அங்கு தான் தேர்ந்த இந்திய ராஜதந்திரம் வெளிப்பட்டது. இந்திய எல்லை முழுக்க இதனை கடை பரப்பி வைக்கவில்லை. ஏனெனில் அமெரிக்காவில் இருந்து வாங்கிய அனைத்தும் தாக்குதல் ரகங்கள். ரஷ்யாவிடம் பெறப்பட்டது போல் அவை தற்காப்பு ரகங்கள் அல்ல என்பதே அப்போது தான் பலருக்கும் புரிந்தது.
தாக்குதலுக்கு தேவைப்படும் அனைத்தையும் கொண்டு வந்து இந்திய எல்லையில் ஒரு தளம் அமைத்து இருக்கிறார்கள்.
அந்த இடத்திற்கு பெயர் #தவாங். அது ஒன்றும் சாதாரணமான இடம் அல்ல. காஷ்மீருக்கு எப்படி டெப்சாங் சமவெளியோ அது போலவே இது டோக்லாம் தக்கான பீடபூமி. பூகோள ரீதியாக இது அமைந்திருக்கும் அமைப்பை அறிந்து கொள்பவர்கள் சீனாவை எதிர் கொள்ள இதைவிட ஆகச் சிறந்த வேறோர் இடம் இந்த பூமியிலேயே கிடையாது என்பார்கள்.
அவ்வளவு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இந்தியா தனது ராணுவத்தினர் நிலைநிறுத்தி வைத்திருக்கிறது.
உலகின் அதி சிறந்த ராணுவ ஆளுமைகள் இந்த இடத்திற்கு உள்ள முக்கியத்துவம் அறிந்து நிலத்தில் சீனாவுடன் போர் என்ற ஒன்று ஏற்பட்டால் அதில் இந்தியா தான் ஜெயிக்கும் என்று இப்பொழுதே அடித்து சொல்லிவிட்டார்கள்.
⭕ சரி எங்கு இருக்கிறது இது இந்தியாவில்?????
சிக்கிம், பூட்டான் என ஒரு காலத்தில் லாட்டரிகளில் பார்த்த இந்திய வட கிழக்கு மாநிலங்களுக்கிடையே அருணாசலப் பிரதேசத்தின் மேற்கு முனையில் நம்முடைய மேற்கு வங்க மாநிலத்தில் கிழக்கு எல்லையில் கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் டோக்லாம் பீட பூமியின் ஒரு பகுதியாக இருக்கிறது இந்த தவாங்.
பிரான்ஸிடம் இருந்து நாம் வாங்கி ரஃபேல் விமானங்கள் கொண்ட ஸ்குவாட்ரன் இந்த தவாங்கில் இருந்து மூன்று நிமிட பறத்தல் தூரத்தில் ஹிம்சாரா எனும் இடத்தில் இருக்கிறது.
எல்லாவற்றையும் விட 1960களில் தலாய் லாமா திபெத்தில் இருந்து தப்பித்து இந்த சுற்றுப்பாதையில் வந்து தான்………., கால்நடையாக 29 நாட்கள் நடைப்பயணத்தில்…… இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இந்தியாவின் சிக்கன் நெக் எனும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சிலிகுரி காரிடார், ஹிம்சாரா மற்றும் தவாங் ஆகிய இந்த மூன்று இடங்கள் பூகோள ரீதியாக ஒரு முக்கோணத்தினை அமைத்து கொடுக்கிறது நம் தேசத்திற்கு.
பலருக்கும் பூட்டான் என்பது இந்திய மாநிலங்களில் ஒன்று என தவறாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது ஒரு தனி நாடு. அதனை எப்படியேனும் ஆக்கிரமிப்பு செய்துவிட வேண்டும் என துடிக்கிறது சீனா. துரத்தி துரத்தி அடித்து வருகிறார்கள் பூட்டான் மக்களும். அவ்வளவு வீரம் நிறைந்த பழங்குடியினர் அந்த மக்கள். அவர்களுடைய சமயம் பௌத்தத்தை சார்ந்த ஒரு பிரிவு. லாவோட்சு வழி வந்தவர்கள்.
எப்படி திபெத்திய மக்கள் திபலா வழிவந்த லாமாக்களை கொண்டவர்களாக இருக்கிறார்களோ அதுபோலவே பூட்டான் மக்கள் தனித்த பிரிவாக இருந்து வருகிறார்கள். இன்றளவும் இந்தியா மீது அதிகப்படியான பிடிமானத்துடன், அதிக பிணைப்புடன் வாழ்ந்த வருகிறார்கள்.
இந்தியா அமெரிக்கா வசமிருந்த பெற்ற அதி நவீன ஆயுதங்கள் அனைத்தையும் இங்கு கொண்டு வந்து குவிந்து வைத்திருக்கிறார்கள்.
மலைப்பாங்கான நிலப்பரப்பில் இயங்க…. ஏறி இறங்க….. ஹெலிகாப்டர்கள் அத்தியாவசிய அவசியம். உலகின் அதி உன்னத செயல்திறன் கொண்ட சினுக் ரக ஹெலிகாப்டர்கள் இந்த பிராந்தியத்தில் செயல்படவே வடிவமைப்பமட்டது போல செயல்படுகிறாம்.
இலகு ரக பீரங்கிகள்…. 45 கிலோமீட்டர் வரை சுடும் துப்பாக்கிகள்…. ஆல்டினரி ஷெல்கள்… சிறிய அளவிலான பங்கர் பஸ்டர் குண்டுகள் நைட் விஷன் கேமரா பொருத்திய கண்காணிப்பு சாதனங்கள் என பார்த்து பார்த்து சேகரித்து வைத்திருக்கிறார்கள் நம் இந்திய ராணுவ தரப்பினர்.
இப்படி சொன்னால் சுலபமாக இருக்கும் புரிந்து கொள்வதற்கு…..
இந்திய ராணுவப்படை வீரர்கள் தங்களுக்கு என பிரத்யேக விமானப் படை பிரிவை நிர்வகித்து வருகிறார்கள்……. அதாவது இந்திய விமானப் படையை தவிர. அப்படி அவர்கள் இயங்கும் ஒரே படைப்பிரிவு இங்கு இந்த தவாங் பகுதி படைதளத்தில் தான் இருக்கிறது. சினூக் ரக ஹெலிகாப்டர்களை இங்கு இயக்குவது இந்திய ராணுவ வீரர்கள் தான். இந்த சினூக் ரக ஹெலிகாப்டர்களை இயக்குவதென்பது ஒரு விமானத்தை இயக்குவது போல மூன்று பேர் சேர்ந்து இயக்குவதாகும்.
இவையெல்லாம் வெறும் சாம்பிள் மட்டுமே……
இதை தவிர சீனாவை எதிர்கொள்ளவே பிரத்தியேக பாணியிலான நடைமுறைகளை ராஜதந்திர ரீதியாக எடுத்து கொண்டு இருக்கிறது இந்தியா.
இப்போது சொல்லுங்கள் எப்படி இருக்கிறது நம் இந்திய பாணி.
இவை ஏதோ பரம ரகசியமான காரியங்கள் அல்ல….. என்பது சீனாவிற்கே மிக நன்றாகவே தெரியும்.
ஒரு அடி ஒரேயொரு அடி இந்தியாவை நோக்கி நகர்ந்தால் தொலைத்துவிடுவார்கள் என்பது பெய்ஜிங்கிற்கு தெரியும். அதைவிட துவைத்து தொங்க விட்டு விடுவார்கள் என அவர்களின் ராணுவத்தினருக்கே மிக நன்றாக தெரியும்.
அதன் பொருட்டே சீனா இந்தியாவிடம் இருந்து விலகி தனது கடல் பலத்தை அதிகரிக்கின்றது. அதன் போதாத காலம் அங்கும் நம்மவர்கள் கோலோச்சி வருகிறார்கள்….
தற்போதைக்கு…… ஊடகங்கள் ஊடாக நடந்தாக அறியப்படும் இந்த தவாங் தாக்குதல் கடந்த 9 ஆம் தேதி அன்று நடந்திருக்கிறது….. நம்மவர்கள் வெறும் 50 பேர் ரோந்து பணியில் இருக்க சீன ராணுவத்தை சேர்ந்த முன்னூறு பேர் வரை இந்த எல்லையில் ஊடுருவலில் ஈடுபட இவர்களுக்கு பின்னணியில் சுமார் இருநூறு பேர் நானூறு மீட்டர் தொலைவில் நின்றிருந்த சமயத்தில் தான் இந்த கைக்கலப்பு சம்பவம் நடந்திருக்கிறது.
இரு தரப்பினரும் துப்பாக்கிகளை பயன் படுத்தவில்லை……ஆன போதிலும் ஆணிகள் பொதிந்த கம்புகளை சீன ராணுவத்தினர் கொண்டு வந்து தாக்கியிருக்கிறார்கள். இதில் நம் இந்திய தரப்பில் 16 பேர் வரை தாக்கப்பட்டு இருக்கிறார்கள்…. எலும்பு முறிவுகள் வரை ஏற்பட்டிருக்கிறது .
ஆனால் நம்மவர்கள் மீண்டும் ஒரு முறை தங்களை யார் என்று நிரூபித்து இருக்கிறார்கள்…….. கொண்டு வந்த ஆயுதங்களை பிடுங்கி அவர்களை பதம் பார்க்க ஆரம்பித்தனர்…… அதில் சீன ராணுவம் படுகாயம் அடைந்தனர்….. சரியாகச் சொன்னால் சுமார் 60 முதல் 70 பேர்கள் வரையில் இருவர் சுமக்க இழுத்து சென்று இருக்கிறார்கள்….. நடக்க கூட முடியாத அளவிற்கு பலத்த அடி வாங்கி இருக்கிறார்கள்…..
இதற்குள் தகவல் அறிந்து, நம் இந்திய ராணுவ வீரர்கள் அந்த இடத்திற்கு விரைவதை பார்த்த தள்ளி நின்று கொண்டு இருந்த சீன ராணுவம் தாங்கள் இருக்கும் இடத்தை விட்டு இருக்கும் இடத்தை அசையக்கூடவில்லை என்கிறார்கள்…
நம் பக்கத்தில் காயம் அடைந்த வீரர்களை கௌகாத்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஹெலிகாப்டரில் அனுப்பி வைத்திருக்கிறார்கள்….இது தவிர சிறு சிறு காயம் அடைந்தவர்களை களத்தில் இருந்து பின் நகர்த்தி அவர்களுக்கு மாற்றீடாக சுமார் நூறு பேர் வரைக்கும் அந்த இடத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
நம் கை ஓங்கி இருக்கும் நிலையில் இந்த சம்பவத்தை பெரிது படுத்திட வேண்டாம் என ராணுவ தரப்பில் முடிவு எடுத்து பெரியதாக பிரஸ்தாபிக்காத தருணத்தில் தான் இங்கு உள்ள சீன அடிவருடிகள் சிலர் இதனை ஏதோ சீனாவின் கை ஓங்கி இருப்பது போல் நினைத்து கொண்டு சிண்டு முடிய …….. தற்போது இந்த விவகாரத்தால் சீனர்கள்… இல்லாத மூக்கை மீண்டும் ஒரு முறை உடைந்து கொண்டு இருக்கிறார்கள் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்….
ஆக மொத்தத்தில் சரியாக சொன்னால்….. இந்தியாவின் எல்லையில் ஊடுருவலில் ஈடுபடவில்லை சீன ராணுவம்…. மாறாக பூட்டானுக்கு பூச்சாண்டி காட்டப்போய்….வம்படியாக வந்து நம்மவர்களிடம் நன்கு வாங்கி கட்டிக் கொண்டு சென்று இருக்கிறார்கள் என்பதே நிஜம்.
கட்டுரை: – ஜெய் ஹிந்த் ஸ்ரீ ராம்