December 6, 2025, 3:10 AM
24.9 C
Chennai

இரவு 10 மணிக்கு மேல் குடிப்பவர்களுக்கு எம்.ஆர். விஜயபாஸ்கர் சொன்ன பகீர் உண்மை!

karur mr vijayabhaskar - 2025

இரவு 10 மணிக்கு மேல் குடிக்கும் மதுபான பிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொல்ல வந்த உண்மை… கரூர் அதிமுக ஆர்பாட்டத்தில் சுவாரஸ்யம்!

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாலுக்கா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட அதிமுக மற்றும் கரூர் மாநகரம், தெற்கு, வடக்கு, மத்திய தெற்கு, மத்திய வடக்கு, மேற்கு பகுதி, கிழக்கு பகுதி அதிமுக சார்பிலும் திமுக அரசின் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேட்டினை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்புரையாற்றிய முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசிய போது.,

கடந்த 10 ஆண்டு காலம் ஜெயலலிதா அவர்களின் ஆட்சி சிறப்பான ஆட்சி நடந்தது. அவரது மறைவிற்கு பின்பு அதிமுக ஆட்சி இருக்குமா ? போய் விடுமா ? என்றெல்லாம் வினா எழுப்பினர். பின்னர் 5 வருட காலம் சிறப்பான ஆட்சி செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி, ஜெ மறைந்த பின்னரும் ஜெயலலிதாவின் ஆட்சியை சிறப்பாக நடத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் அவர் கூறினார். மேலும், கையிலையும், கழுத்திலையும் பெண்கள் அணிந்திருக்கும் நகைகளை கவரிங் நகைகளாக போட்டுக்குங்க, ஏனென்றால் திமுக வினர் ஆங்காங்கே உருவிக்கொண்டு விடுகின்றனர்.

தமிழகத்தில் சாராயம் ஆறாக ஓடுகின்றது. ஆட்சிக்கு வரும் முன்னர், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாராய ஆலைகள் மூடப்படும் என்றும் அவர் கூறின பிறகு. தற்போது மது விற்பனை அதிகரிக்கின்றது. 24 மணி நேரமும் மது விற்பனையாகி வருகின்றன என்று கூறிய முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், பேசிகொண்டிருக்கும் போது., அப்போது 10 ரூபாய் அதிகமாக ஒவ்வொரு குவார்ட்டருக்கும் விற்கப்படுகின்றது என்று தொண்டர் ஒருவர் வினா எழுப்ப, 10 ரூபாயா ? அதில் ரூ 5 மந்திரிக்கும், ரூ 5 மற்றவர்களும் பிரித்து கொள்வார்கள் என்றும் விடை அளித்தார்.

இதுமட்டுமில்லாமல், தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் இரவு 10 மணிக்கு மேல் சரக்கு வாங்குபவர்களின் பணம் வரி இல்லாமல் மந்திரி செந்தில்பாலாஜிக்கு செல்வதாகவும், இதை தமிழக நிதி அமைச்சரே ஒருமுறை கூறியுள்ளார். அவர் அவ்வப்போது உண்மை கூறி வருவதாகவும், வரி இல்லாமல் ரூ 5 ஆயிரம் கோடி வேறு செல்வதையும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டினார்.

இதுமட்டுமில்லாமல், புதுவிதமாக கரூர் திமுக வினர் தற்போது மணல் கடத்துவதாகவும், கான்க்ரீட் போடும் ரெடி மிக்ஷரில் மணலை கடத்துவதாகவும் அதை அதிமுக வினர் பிடித்து தரும் போது அரசாங்க உத்தியோகத்தில் தலையிட்டால் கைது செய்வோம் என்று காவல்துறை கூறி வருவதையும் பொதுக்கூட்டத்தில் கூறினார். இதுமட்டுமில்லாமல், காவல்துறை கண்காணிப்பாளரிடம் நானே கூறியதற்கு வேறு இடத்திலிருந்து இருக்கும் மணலை மற்ற இடத்திற்கு மாற்றுவதாகவும் அது மணல் திருட்டு அல்ல, என்று ஒரு காவல்துறை கண்காணிப்பாளரே கூறி வருவதாகவும் பேசினார்.

இதுமட்டுமில்லாமல், ஓசியில் பயணம் செய்து வருகின்றீர்கள் என்று பெண்மணியை பார்த்து பொன்முடி கூறியதையும், மத்திய முன்னாள் அமைச்சர் ராஜா இந்துக்களை கேவலமாக வேசி மகன் என்று கூறி பெண் இனத்தினையும் கொச்சைப்படுத்திய சம்பவத்தினை தொடர்ந்து சாதிக் பாட்ஷா என்கின்ற திமுக நிர்வாகி மிகவும் கீழ் தரமாக பெண்களை பேசியதை திமுக தலைமை எந்த வித நடவடிக்கையும் எடுக்காததை சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இதே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆக இருந்திருந்தால் கைது செய்திருப்பார் என்றும் கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், தற்போது கரூரில் நாக்கில் ஒட்ட வைக்கும் புதிய வகை அபின் போல் ஒன்று விற்கப்பட்டு வருவதாகவும், அபின், கஞ்சா உள்ளிட்டவைகளை பதுக்கி வைக்கும் திமுக பிரமுகர்களை கைது செய்யும் காவல்துறை பின்னர் அது உரம் என்று மறைக்கின்ற சம்பவத்தினையும் விளக்கினார். மேலும், அதிமுக வினர் மீது வேண்டுமென்றே பொய் வழக்கு பதியப்பட்டு வருவதாகவும், எத்தனை வழக்குகள் பதிந்தாலும் நான் இருக்கின்றேன் தம்பி உன்னோடு சேர்ந்து போராட என்று கூறியதோடு, ஆட்சியும் மாறும் காட்சியும் மாறும், அப்போது நம்மிடம் பதவி சுகத்தினை அனுபவத்தி விட்டு திமுக கட்சிக்கு சென்றவர்கள் லிஸ்ட் நம்மிடம் இருக்கு பார்த்துகொள்வோம் என்றும் கூறினார்.

பின்னர் தமிழக அரசினை கண்டித்தும், மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு ஆகியவற்றினை கண்டித்து ஆர்பாட்ட கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories