
1989 ஆம் ஆண்டு விஸ்வ ஹிந்து பரிஷத் தலைமையில் மிக முக்கியமானதொரு கூட்டம் அஹமதாபாத்தில் எற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பா.ஜ.க. பிரதிநிதியாக அக்கூட்டத்தில் பங்கேற்க நரேந்திர மோதி அஹமதாபாத் வந்திருந்தார்.
அந்நேரத்தில் நரேந்திர மோதியின் தந்தை தாமோதரதாஸ் மோதி இறந்து விட்டார் என்ற செய்தி வந்தது. தந்தையின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க உடனடியாக வாத்நகர் புறப்பட்டுச் சென்றார். எனவே இக்கூட்டத்தில் அவர் பங்கேற்கமாட்டார் என்றே அனைவரும் முடிவு செய்தனர்.
மதியத்திற்குப் பிறகு கூட்டம் தொடங்கி யது. அப்போது அங்கு நரேந்திர மோதி வந்து சேர்ந்தார். மற்றவர்கள் அனைவரு க்கும் பெரும் அதிர்ச்சி.
கூட்டத்தின் இடைவேளையில் ஒரு கார்யகர்த்தர் மோதியிடம் இதைப் பற்றி கேட்டபோது அவருக்கு மோதி கட்சியின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக இக்கூட்டத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளேன் என்று பதில் அளித்தார்.
வாத்நகர் சென்ற மோதி தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்று அது நிறை வேறியவுடன் புறப்பட்டு அஹமதாபாத் கூட்டத்தில் பங்கேற்க வந்து விட்டார்.
அன்று 1989இல் தந்தை காலமான போதும், இன்று 2022 இல் தாயின் மறைவின் போதும் நரேந்திர மோதியின் மனநிலை யில் மாற்றம் எதுவும் இல்லை என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி தெரிவித்துள் ளார்.
பிரதமர் நரேந்திர மோதியின் தாயார் ஹீரா பென் நேற்று காலமாகிவிட்டார் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே.
அவரது இறுதிச் சடங்குகள் எவ்வித ஆரவாரமுமின்றி அமைதியாக ஒரு சாதாரண குடும்பத்தில் நடைபெறுவதைப் போன்று நடந்தது.
பிரதமர் மோதியும் சாதாரண ஒரு மகனாக இதில் கலந்து கொண்டார். அதன்பின் உடனடியாக தனது பிரதமர் கடைமையைத் தொடர்ந்தார்.
பிரதமர் மோடியின் இந்த செயல் பலருக்கு வியப்பை அளித்தாலும் ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.
பதவி வரும் போது பணிவு வர வேண்டும்:
- நா. சடகோபன்