
மணிப்பூர் பிரச்சினை குறித்து பெரும்பாலோருக்குப் புரிதல் இல்லாத காரணத்தால் ஒரு சிறுகுறிப்பு மட்டும் வரைகிறேன். மேலும் தகவல் வேண்டுவோர் இணையத்தில் தேடிப் படித்துக் கொள்க.
அடிப்படையில் மணிப்பூர் பிர்ச்சினை என்பது மணிப்பூரின் மண்ணின் மைந்தர்களான ஹி!ந்து மைத்தி பழங்குடியினருக்கும், வந்தேறிகளான குறிஸ்தவ குக்கி பழங்குடியினருக்கும் இடையேயான மோதல்.
மணிப்பூர் ராஜ்ஜியம் தொடர்ச்சியாக ஹிந்து அரசர்களால் ஆளப்ப்ட்டு வந்ததொரு பகுதி. கடந்த இரண்டாயிரம் வருடங்களாக அதனை ஆண்ட ஹிந்து அரசர்களைப் பற்றிய தொடர்ச்சியான வரலாற்றுக் குறிப்புகள் இன்றைக்கும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
ஹிந்து மைத்தி பழங்குடியினர்களில் பெரும்பாலோர் வைணவர்கள். மணிப்பூரின் ஹிந்து அரசருக்கும், பர்மாவை ஆண்டவர்களுக்கும் பிரச்சினை இருந்ததால் அவர் பிரிட்டிஷ்காரர்களின் உதவியை நாடினார். இதனைச் சாக்காக வைத்து பிரிட்டிஷ்காரர்கள் மணிப்பூரை அபகரித்துக் கொண்டார்கள்.
இதனால் கோபமடைந்த மணிப்பூர் அரசர் பிரிட்டிஷ்காரர்களுடன் போரிட்டார். வெள்ளைக்காரர்கள் அந்தப் போரில் வென்றார்கள். மணிப்பூர் இளவரசனைப் பிடித்து அவனை ஊரின் மையத்தில் தூக்கிலிட்டுக் கொன்றார்கள். அரசனை அந்தமானுக்கு நாடு கடத்தினார்கள். அதற்குப் பிறகு அந்த அரசர் என்னவனார் என்று எவருக்கும் தெரியவில்லை.
மணிப்பூர் மலைப்பாங்கான மாநிலம் என்றாலும் மைத்திக்கள் பெரும்பாலும் இம்பால் சமவெளியில் மட்டுமே வசித்தார்கள். மலைப்பகுதிகளில் அவர்கள் அதிகம் வசிக்கவில்லை. நாகா பழங்குடியினர் அந்த மலைப்பகுதிகளில் வசித்தனர்.
என்றைக்கிருந்தாலும் மணிப்பூரிகள் தங்களை எதிர்த்துப் போரிடுவார்கள் என்று எதிர் நோக்கிய பிரிட்டிஷ்காரர்கள் பர்மாவிலிருந்து குக்கி பழங்குடியினரை மணிப்பூர் மலைப்பகுதிகளெங்கும் குடியமர்த்தினார்கள். அப்படிக் குடியமர்த்தப்பட்டவர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்ட பிறகே அங்கு குடியேற அனுமதி கிடைத்தது.
இந்த பர்மிய குக்கி பழங்குடியினர் பிரிட்டிஷ்காரர்களுக்கு ஆதரவாக போரிட்டவர்கள். அவர்களின் பூர்விகம் பர்மா இல்லை. தென் சீனாவிலிருந்து முன்னூறு வருடங்களுக்கு முன்னர் பர்மாவின் சின் (Chin) மாகாணத்தில் குடியேறியவர்கள். இந்தியாவை ஒட்டியிருக்கும் இந்த சின் பகுதி வழியாக ஏராளமான கிறிஸ்தவ குக்கிகள் மணிப்பூர் மலைப்பகுதியெங்கும் குடியேறினார்கள். இன்றைக்கும் குடியேறிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஹிந்து மைத்திக்களைப் பழிவாங்க இது போதாது என நினைத்த பிரிட்டிஷ்காரர்கள், ஹிந்து மைத்திகள் தாங்கள் வாழும் சமவெளிக்கு வெளியே நிலம் வாங்குவதற்குத் தடை விதித்தார்கள். அதாகப்பட்டது சொந்த நாட்டிலேயே ஹிந்து மைத்தி அகதியாக்கப்பட்டான். அதற்கு நேரெதிராக வந்தேறி கிறிஸ்தவ குக்கிக்கள் எங்கு வேண்டுமானாலும் நிலங்கள் வாங்கலாம். அவர்களுக்கு எல்லாச் சலுகைகளும் வழங்கப்பட்டன. மைத்திக்கள் நசுக்கப்பட்டார்கள்.
நாடு விடுதலையடைந்த பின்னர் இதனைச் சரி செய்திருக்க வேண்டும். ஆனால் சாச்சா நேரு அதனைச் செய்யவில்லை. பிரச்சினை பூதாகரமானது.
இதன் காரணமாக மைத்தி, குக்கி மோதல்கள் அடிக்கடி நடந்தன. இரண்டு பக்கமும் சேதாரங்கள் அதிகமானதால் இந்திய அரசு அந்தப் பகுதியில் ராணுவச் சட்டத்தைக் கொண்டுவந்து அமைதியை நிலை நாட்டியது. ஆனால் அந்தச் சட்டத்தை நீக்கவேண்டும் என்று மணிப்பூரிகள் போராட்டம் தொடங்கினார்கள். ஜெரோம் ஷர்மிளா என்கிற பெண் தொடர்ச்சியாக 16 வருடங்கள் உண்ணாவிரதம் இருந்தாள். வேறு வழியில்லாமல் இந்திய அரசு ராணுவச் சட்டத்தை நீக்கியது. அன்றிலிருந்து இன்றுவரை மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை.
மைத்திக்கள் தங்களுக்கும் சம உரிமை வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். அதனை விசாரித்த நீதிபதி ஒருவர், “மைத்திக்களுக்கும் சம உரிமை கொடுக்கலாம்” என்று சொன்னதே இன்றைய கலவரங்களுக்குக் காரணம்.
அவர்களுக்கு சம உரிமை கொடுக்கக்கூடாது என்று குறிஸ்தவ குக்கிக்கள் ஒற்றைக்காலில் நிற்கிறார்கள். பர்மாவிலிருந்தும், சீனாவிலிருந்து நவீன ஆயுதங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்திய ராணுவத்திற்கு எதிராக அந்த ஆயுதங்கள் இன்றைக்கு உபயோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தங்களுக்கு அதிகாரம் இல்லாததால் ராணுவம் அமைதி காக்கிறது. கிறிஸ்தவ குக்கிக்கள் பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு புறம், சீனாவின் கூட்டாளிகளான ராகுல் வின்ஸியும், சோனியா மைனோவும் இந்த நெருப்பு அணையாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
- பி.எஸ். நரேந்திரன்