ஒருவழியாக சந்திரபாபு நாயுடுபிஜேபி கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். எதிர்பார்த்தது முடிவு தான். பிஜேபியின் வளர்ச்சிக்கு வழி விட்டதற்கு வாழ்த்துக்கள்… நாயுடுகாரு!
ஆந்திர அரசியலை உன்னிப்பாக ஆராய்ந்தால் பிஜே பியை சந்திரபாபு நாயுடு எப்படியெல்லாம் ஏமாற்றி இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம். 2004 ல்
இருந்து 2014 வரை பத்து வருஷ ம் ஆந்திர அரசியலி ல் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்த நாயுடுக்கு 2014 ல் லிப்ட் கொடுத்தது பிஜேபி தான்.
.
ஏனென்றால் 2014 சட்டமன்ற தேர்தலில் பிஜேபி மட்டும் இல்லைஎன்றால் நாயுடுக்கு நாக்கு தள்ளி இருக்கும். ஏனென்றால் அப்பொழுது ஆந்திராவில் வீசியது ஜெகன் மோகன் ரெட்டி அலை.இந்த அலை யை அப்பொழுது நாடெங்கும் வீசிய மோடி சுனாமி தான் முறியடித்தது.
அப்பொழுதே ஜெகன்மோகன் ரெட்டி பக்கமும் பிஜேபி பார்வை இருந்தது. இருந்தாலும் நாயுடு பிஜேபி யின் நீண்ட கால நண்பர் என்பதினாலே மோடி நாயுடு பக்கம் நின்றார். அப்பொழுது அமித்ஷா மட்டும் பிஜேபியின் தலைவராக இருந்திருந்தால் நாயுடு முதல்வராக ஆகியிருக்க முடியாது.ஏனென்றால்
அந்தளவிற்கு பிஜேபியை கிள்ளு கீரையாக நினைத் தார் நாயுடு.
நாயுடு ஒரு பக்கா சந்தர்ப்பவாதி.சுருக்கமாக சொன்னால் கருணாநிதியின் சிஷ்யர் என்று சொல்லலாம். யாரை எந்த நேரத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று வித்தை தெரிந்தவர்.கடந்த 2014 லோக்சபா மற்றும் சட்டமன்ற தேர்தலிலேயே ஆந்திர பிரதேச பிஜேபி தெலுங்கு தேசத்துடன் கூட்டணி வேண்டவே வேண்டாம் என்று ராஜ்நாத் சிங்கிடம் மல்லுக்கு நின்றார்கள்.
ஏனென்றால் சட்டமன்ற தேர்தலில் வெறும் 10 தொ குதி கள் மட்டுமே தர முடியும் லோக்சபாவில் 2 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று படு கேவ லமாக பிஜேபி யை நடத்தியவர்.இதனால் கடுப்பான மாநில பிஜேபியினர் ஒரு கட்டத்தில் சீமாந்திரா மற்றும் தெலுங்கானாவில் பிஜேபி தனித்து போட்டி யிடும் என்று அறிவித்து விட்டார்கள்.
அப்புறம் நாயுடுவே இறங்கி வந்து ஆர்எஸ்எஸ் தலைவர்களை வைத்து பஞ்சாயத்தை முடித்து சீமாந்திராவில் சட்டமன்றத்தி ற்கு 15 தொகுதிகளை யும் லோக்சபாவிற்கு 5 தொகுதியும் கொடுத்தார். பிஜேபிக்கு மனசில்லை இருந்தாலும் காங்கிரசுக்கு சிறு வாய்ப்பு கூட கொடுக்க கூடாது என்பதற்காக தான் வேறு வழியில்லாமல் கடந்த தேர்தலில் பி ஜேபி தெலுங்கு தேசக்கூட்டணி யை ஏற்றுக்கொண்டது.
நாயுடுவின் அரசியல் அப்படியே கருணாநிதி ஸ்டை ல் தான்.2009 தேர்தலில் மூன்றாவது அணி என்று கம்யூனிஸ்ட்களுடன் கூட்டணி 2014 தேர்தலில் பிஜேபி யுடனான கூட்டணிப் பிரச்சனையை முடித் து வைக்க ஆர்எஸ்எஸ் உதவி கேட்டு ஓடி வந்த நாயுடுக்கு என்ன கொள்கை இருக்க முடியும்?
பிஜேபி கூட்ட ணியில் இருந்து நாயுடுவே போகட் டும் என்று அமித்ஷாவே திட்டமிட்டு காய் நகர்த்தி காத்திருந்தார். ஏனென்றால் ஆந்திராவில் அமித் ஷாவின் அரசியல் கணக்கு வேறு விதமாக இருக்கி றது.அனேகமாக ஜெகன்மோகன் ரெட்டி தான் ஆந்திராவில் பிஜேபியின் அடுத்த பார்ட் னர்.
இதனால் பிஜேபிக்கு இரண்டு விதமான லாபம் இருக் கிறது.ஏனென்றால் தெலங்கானா மாநில உருவாக்க த்திலும் ஜெகன்மோகன் ரெட்டியை உள்ளே தள்ளிய திலும் அவசரப்பட்டு முடிவெடுத்து எப்பொழுதும் 30 எம்பிகளை அள்ளிக்கொடுத்து காங்கிரஸ் கோட்டை யாக இருந்து வந்த ஆந்திரா தெலுங்கானா பகுதிக ளை ராகுலின் முட்டாள்த்தனத்தினால் இழந்து நிற்கிறது காங்கிரஸ்.
இந்தப்பகுதிகளில்மீண்டும் ஜெயிக்க முடிந்தால்தான் காங்கிரஸ் அடுத்த ஆட்சியைப்பற்றி கனவிலும் நினைக்க முடியும்.அதனால் எந்த ஜெகன் மோகன் ரெட்டியை உள்ளே தூக்கிப்போட்டார்களோ அவரிட மே கூட்டணிக்காக காங்கிரஸ் பேச்சு வார்த்தையை ஆரம்பித்துவிட்டது.
காங்கிரசுடன் இணைந்து செயல்பட ஜெகனுக்கு வி ருப்பம் இல்லை என்றாலும் வரும் தேர்தலில் ஆட்சி யை பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கி றார்.அடுத்தும் தோல்வி என்றால் கட்சி காணாமல் போய் விடும் என்கிற பயத்தினால் கூட்டணியை
தேடுகிறார்.இதற்கு முக்கிய காரணம் 2014 தேர்தல் முடிவுகள்.
2014 தேர்தலில் வெறும் 2 சதவீத ஓட்டில் தான் சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரசை வீழ்த்தியது.
இந்த தேர்தலில் வீசிய மோடி சுனாமி மற்றும் பிஜே பியின் சராசரி வாக்கு வங்கியான 3 சதவீதம் என்று அனைத்தும் சேர்ந்து தான் தெலுங்கு தேசத்தை ஜெயிக்க வைத்ததே தவிர நாயுடுவின் பாப்புலாரிட்டி அல்ல.
அதே நேரத்தில் ஆச்சரியம் என்னவென்றால் தெலங்கானா பிரிவிற்கு காரணமான காங்கிரஸ் மீது சீமாந் திரா மக்கள் கோபத்தில் இருந்தாலும் 3 சதவீதத்திற் கும் அதிகமான வாக்குகள் அங்கே காங்கிரஸ் கட்சி க்கு கிடைத்தது.இந்த 3 சதவீத வாக்குகள் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சென்று இருந்தால் சந்திர பாபு
நாயுடு ஆட்சிக்கே வந்திருக்க முடியாது.
இதனால் 2014 சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயு டுக்கு கிடைத்த வெற்றிக்கு முக்கிய காரணம் கூட்ட ணி கட்சியான பிஜேபி யின் 3 சதவீத ஓட்டுக்களும் ஜெகன் மோகன் ரெட்டி க்கு செல்ல வேண்டிய 3 சத வீத ஓட்டுக்களை காங்கிரஸ் பிரித்ததும் தான் முக்கி ய காரணம்.ஏனென்றால் சுமார் 6 லட்சம் ஓட்டுக்கள் தான் 102 தொகுதிகளில் ஜெயித்த தெலுங்கு தேச த்திற்கும் 67 தொகுதிகளில் ஜெயித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்க்கும் இடையில் இருந்த வாக்கு வித்தி யாசம்.
அதனால் வரும் தேர்தலில் ஏதாவது கூட்டணியை தேடும் ஜெகனுக்கு முதல் சாய்ஸ் பிஜேபி தான். பிஜேபி யும் இதைத்தான் விரும்புகிறது.10 அல்லது 15 சீட்டுக ளுக்கு நாயுடுவிடம் மல்லுக்கு நிற்பதை விட குறைந் தது 40 தொகுதிகளை ஜெகன் மோகன் ரெட்டியிடம் இருந்து பெற்று அதில் கணிசமாக வெற்றிப்பெற்று ஆந்திர அரசில் முக்கியமான இடத் தில் பிஜேபி இருக்க வேண்டும் இது தான் அமித்ஷா ஆசை.
அதோடு ஆந்திர அரசியலில் புதிதாக முளைத்துள்ள சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணின் ஜனசேனா மீதும் காங்கிரஸ்க்கு ஒரு கண் இருக்கிறது.ஒரு வே ளை ஜனசேனாவோடு காங்கிரஸ் கூட்டணிவைத்தா ல் செத்துப்போன அந்த கட்சிக்கு மறுவாழ்வு கிடைத்து விடும்.நாயுடுவுக்கும் ஜனசேனா மீது ஒரு கண்
இருக்கிறது.
அதனால் ஆந்திர அரசியலில் காங்கிரஸ் எழுந்திருக் கவே கூடாது என்று விரும்பும் பிஜேபி தெலுங்கு தேசத்தை பவன் கல்யாணின் ஜனசேனாவை நோக்கி தள்ளி விடுவதற்காகவே தெலுங்கு தேசத்தின் கோரிக்கைகளை கண்டு கொள்ளாமல் விட்டு இருக்கலாம்.
இப்பொழுது பிஜேபி கூட்டணியில் இருந்து வெளி யேறும் தெலுங்குதேசம் நிச்சயமாக பவன் கல்யாணின் ஜன சேனாவோடு தான் கூட்டணி வைக்கும். இதனால் ஜனசேனாவோடு கூட்டணி வைத்து உயி ர்த்தெழ நினைக்கும் காங்கிரசின் முதல் முயற்சி அடிபடுகிறது.
அடுத்து ஜெகன்மோகன் ரெட்டியோடு பிஜேபி கூட்ட ணி சேரும் பொழுது காங்கிரஸ் உயிர்த்தெழ இரு க்கும் அடுத்த கட்ட வாய்ப்பும் இல்லாமல் போய் விடும்.ஆக தெலுங்கு தேசம் வெளியேறியதால் பிஜேபிக்கு எந்த இழப்பும் இல்லை. மாறாக ஜெகன் மோகன் ரெட்டியோடு பிஜேபி வைக்கும் கூட்டணி வெற்றி பெற்றால் பிஜேபி ஆந்திர அரசில் வலுவாக இடம் பெறும்.
நாயுடு தன்னுடைய ஆட்சியின் தவறுகளை எல்லா ம் பிஜேபி தலையில் கட்டிவிட்டு ஜன சேனா வோடு கூட்டணி வைக்க ஆசைப்படமுக்கிய காரணம். என்னவென்றால் ஜெகன்மோகன் ரெட்டியின் முக் கிய ஓட்டு வங்கியான காய்புகளக பவன் கல்யான் மூலம் தெலுங்கு தேசம் பக்கம் கொண்டு வந்துவிட்டால் வரும் தேர்தலில் ஈசியாக ஜெயித்து விடலாம் என்று கணக்கு தான்.
ஆனால் அமித்ஷாவின் கணக்கு வித்தியாசமானது. 20 வருஷமாக ஆந்திராவில் ஒரே இடத்தில் இருக்கும் பிஜேபியை ஜகன் மோகன் ரெட்டியோடு கூட்டணி வைப்பதால் அதிக தொகுதிகள் வாங்கி ஜெயி த்து வரும் தேர்தலில் பிஜேபியை ஆட்சியை நிர்ண யிக்கும் அளவிற்கு அடுத்த கட்டத்திற்கு கொண்டு வந்துவிடலாம் என்று நினைக்கிறார்.
இது தாங்க அமித்ஷாவின் அரசியல் கணக்கு. கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேறப்போகிறது என்று தெரிந்தும் அதைப்பற்றி துளிக்கூட கவ லைப்படாமல் நீங்கள் போனால் போங்கள் நீங்கள் இல்லாவிட்டாலும் உங்களை விட உயர்ந்த இடத்தில் வரும் தேர்தலின் முடிவில் ஆந்திராவில் இருப்போம் என்று சந்திரபாபு நாயுடுவை வழி அனுப்பி வைத்து விட்டார்.
– அருணகிரி



