
–விஜயகுமார் அருணகிரி
2026 ல் தொகுதி மறுசீரமைப்பில் தமிழ் நாட்டை விட வட மாநிலங்களில் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றவுடன் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கொதித்து மத்திய அரசிற்கு எதிராக
மல்லுக்கு நிற்கிறார்கள்.
இதே மாதிரி தான் இப்பொழுது வட இந்திய மாநிலங்களில் உள்ள மக்கள் நம்மை விட குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட தமிழகத்திற்கு அதிக லோக்சபா தொகுதிகளா? என்று பிஜேபி மீது வருத்தத்தில் இருக்கிறார்கள்.
இப்பொழுது பாராளுமன்றத்தில் உள்ள 543 லோக்சபா தொகுதிகளும் 1971 ல் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி முடிவு செய்யப்பட்டது. இப்பொழுது 2026 மக்கள் தொகை
அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு அமைய இருக்கிறது.
இதனை தான் தமிழக அரசியல்
கட்சிகள் எதிர்த்து வருகின்றன
1971 ல் உள்ள மக்கள் தொகை
அடிப்படையிலேயே இப்பொழுது உள்ள தொகுதிகள் அளவில்தான் இருக்க வேண்டும் என்கின்றன.
தமிழகத்தில் 1971 ல் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 15
ஆகும். இப்பொழுது உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆகும். மக்கள் தொகை அதிகரிப்பால் நிர்வாக வசதிக்காக 1971ல் இருந்து 2025 வரை 23 புதிய மாவட்டங்களை உருவாக்கி இருக்கிறோம்.
ஆனால் மத்திய அரசு மக்கள்தொகை அதிகரிப்பால் மாநிலங்களில் உள்ள லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தினால் இது தப்பு கூடாது 1971 ல் உருவாக்கிய படி தான் லோக்சபா தொகுதிகள் இருக்க
வேண்டும் என்று நியாயம் பேசுகிறார்கள்.
இப்பொழுது தமிழகம் சுமார் 7•70 கோடி மக்கள்தொகையைக் கொண்டு இருக்கிறது. இந்த வருடத்தின் முடிவில் சுமார் 8 கோடியை தாண்டி இருக்கும்.
ஆனால் பீகார் 2025 ம் ஆண்டின்
முடிவில் சுமார் 14 கோடி மக்கள்தொகையை வைத்து இருக்கும்.
அதாவது தமிழக மக்கள் தொகையை விட இன்னொரு மடங்கு மக்கள் தொகையை பீகார் வைத்து இருக்கிறது.
இருந்தாலும் தமிழகத்திற்கு 39
லோக்சபா தொகுதிகள் தமிழகத்தை விட இரண்டு மடங்கு மக்கள் தொகையை கொண்ட பீகார்க்கு 40 லோக்சபா தொகுதிகள்.
இதுவா உண்மையான அரசியல் அமைப்பின் அடையாளம்?
மத்திய பிரதேசத்தின் மக்கள்தொகை இந்த வருடத்தின் முடிவில் சுமார் 9 கோடியாக இருக்கும். இப்பொழுதே மத்திய பிரதேசத்தின் மக்கள் தொகை தமிழ் நாட்டை விட சுமார் 1 கோடி அதிகமாக இருக்கிறது.
ஆனால் மத்திய பிரதேசத்திற்கு தமிழகத்தை விட 10 லோக்சபா தொகுதிகள் குறைவாக 29 ஆக இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் மக்கள் தொகை இப்பொழுது 8•5 கோடியை தாண்டி விட்டது அதாவது தமிழகத்தை விடஅதிகமாக இருக்கிறது.
ஆனால் தமிழகத்தை விட 14 லோக்சபா தொகுதிகள் ராஜஸ்தானுக்கு குறைவாக இருக்கிறது. குஜராத் மாநிலத்தின் மக்கள்தொகை இப்பொழுது சுமார்7•5 கோடிகளாகி விட்டது. கிட்டத்தட் ட தமிழகத்தில் உள்ள மக்கள்தொகை மாதிரி தான் குஜராத்தும் இருக்கிறது.
ஆனால் அங்கு 26 லோக்சபா தொகுதிகள் தான். அதாவது தமிழகத்தை விட 13 லோக்சபா
தொகுதிகள் குறைவாக இருக்கிறது. இதுவா உண்மையான மக்கள் ஆட்சியின் அடையாளம்? நிச்சயமாக இல்லை.
இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் இந்த வருட முடிவில் சுமார் 25 கோடியாக இருக்கும். அதாவது தமி ழகத்தை விட சுமார் 3 மடங்கு மக்கள் தொகை உடைய உத்தர பிரதேசத்தில் இப்பொழுது 80 லோக்சபா தொகுதிகள் தான் இருக்கிறது.
அதாவது தமிழகத்தை விட 2 மடங்கு தொகுதிகள் தான் அதிகமாக இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தின் மக்கள் தொகை இப்பொழுது சுமார் 4•2 கோடி இருக்கும். அதாவது தமிழகத்தின் மக்கள் தொகையை விட பாதிக்கும்மேல் இருக்கிறது.ஆனால் ஜார்கண்டில் 14 தொகுதிகள் தான்
இருக்கிறது.
ஹரியானா மாநிலத்தின் மக்கள் தொகை இப்பொழுது சுமார்
3•2 கோடி . கிட்டதட்ட தமிழகத்தின் மக்கள் தொகையில் பாதிக்கு சிறிது குறைவு அவ்வளவு தான். ஆனால் லோக்சபா தொகுதிகள் 10 தான்.
மகாராஷ்டிராவின் மக்கள் தொகை இப்பொழுது சுமார் 13•5 கோடியாகும். இது தமிழகத்தைவிட சுமார் 1 மடங்கு அதிகமாகத்தான் இருக்கிறது. அங்கு 48 லோக்சபா தொகுதிகள் தான். அதாவது தமிழகத்தை விட 11 தொகுதிகள் தான் அதிகம்.
மேற்கு வங்காளத்தில் 2025 முடிவில் சுமார் 10-6 கோடி மக்கள்தொகை இருக்கும் . மேற்கு வங்காளத்தில் 42 லோக்சபா தொகுதிகள் இருக்கிறது. அதாவது தமிழகத்தை விட சுமார் 2-5 கோடி மக்கள் அதிகமாக உள்ள மேற்கு
வங்காளத்திற்கு தமிழகத்தைவிட 3 லோக்சபா தொகுதிகள்தான் அதிகம்.
அஸ்ஸாம் மாநிலத்தின் மக்கள்தொகை சுமார் 4 கோடியாகும்
ஆனால் அங்கு உள்ள லோக்சபா தொகுதிகள் 14 தான். அதாவது தமிழகத்தை விட பாதி அளவில் மக்கள் தொகை உள்ள அஸ்ஸாமிற்கு தமிழகத்தின் உள்ள லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை படி பார்த்தால் குறைந்தது 19 தொகுதிகள் வரை இருக்க வேண்டும்.
ஒடிசா மாநிலத்தின் மக்கள் தொகை இப்பொழுது சுமார் 5 கோடியாகும். தமிழகத்தை போன்று முக்கால் மடங்கு மக்கள் தொகை உடைய ஒடிசாவில் இப்பொழுது 21 தொகுதிகள்தான் இருக்கிறது.
தமிழகத்தின் மக்கள் தொகையை விட அதிகமாக உள்ள மாநிலங்களில் எங்களுக்கு ஏன் இது வரை குறைவான லோக்சபா தொகுதிகள் இருக்கின்றன என்று மத்திய அரசிற்கு எதிராக
போராடவில்லை. ஏன் என்றால்
அந்த மாநிலங்கள் தொகுதி மறு
சீரமைப்பு வரும் பொழுது தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று காத்து இருக்கின்றன.
மக்கள் தொகையின் உயர்விற்கு ஏற்ப ஒரு மாநிலத்தின் லோக்சபா தொகுதிகள் உயர்த்தப்பட வேண்டும். அதன் எல்லைகள் மாற்றப்பட வேண்டும். இதற்குதான் தொகுதி மறு சீரமைப்பு ஆணையம் என்று இந்தியாவில் ஒரு தனி அமைப்பு இருக்கிறது.
இந்த அமைப்பின் பரிந்துரையின் படி 2026 ல் இந்தியாவில் உளள மக்கள் தொகையின் அடிப்படையில் லோக்சபா தொகுதிகள் உயர இருக்கிறது. இது வரை உள்ள 543 லோக்சபா தொகுதிகள் இனி இருக்காது. அது நிச்சயமாக 800 ஐ தாண்டி இருக்கும்
பீகாரில் குறைந்தது 70 லோக்சபா தொகுதிகள் இருக்கும். இதே
மாதிரி வட இந்திய மாநிலங்கள்
அனைத்தும் அதிகமான லோக்சபா தொகுதிகளை பெற இருக்கிறது. 2026ல் தொகுதி மறு சீரமைப்பு ஆணையத்தின் அறிவுரைப்படி லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும்.
எந்த ஒரு மாநிலத்திலும் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது தமிழகத்திலும் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது.தமிழகத்தில் 7-10 தொகுதிகள் வரை அதிகரிக்க இருக்கிறது.
ஆனால் மற்ற வட மாநிலங்களில் லோக்சபா தொகுதிகளின் எணிக்கை மிக அதிகமாகி விடும்.
உத்தரபிரதேசம்-63 பீகார்-39 மகாராஷ்டிரா-28 ராஜஸ்தான் -25
மத்திய பிரதேசம்-23 மேற்கு வங்காளம்-18 குஜராத்-17 ஜார்கண்ட்
-10 ஹரியானா-8 சட்டிஸ்கர்-8 ஒடிசா-8 என்று வட மாநிலங்களில் இருந்து
சுமார் 250+ தொகுதிகள் அதிகமாக இருக்கிறது.
1971 ல் இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 55 கோடியாக இருந்தது.அதன்படி 543 லோக்சபா தொகுதிகள் உருவானது. இப்பொழுது சுமார் 146 கோடியாகும். இப்பொழுதும் அதே 543
தொகுதிகள் தான் இருக்க வேண்டும் அது தான் சரியானது என்று கூறினால் அதை விட முட்டாள் தனம் வேறு எதுவும் இல்லை.
.