
எப்படி நீட்-டை தடுப்போம் என ஏதும் செய்ய முடியவில்லையோ, நீட் மக்களைச் சென்றடைந்ததோ, மக்கள் ஏற்றுக் கொண்டார்களோ அதே போல மும்மொழிக் கொள்கைத் திட்டமும் மக்களைச் சென்றடையும், மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் – என, உசிலம்பட்டியில் பாஜக செயற்குழு உறுப்பினர் ரவிபாலா செய்தியாளர்களிடம் கூறினார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூரில் பாஜக சார்பில் மொம்மொழி கொள்கை குறித்தும் அதனை ஆதரிப்பது குறித்து நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் பாஜக தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளருமான ரவிபாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ரவிபாலாம் எப்படி நீட்-டைத் தடுப்போம் என சொல்லிக் கொண்டு அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லையோ, மக்களை சென்றடைந்ததோ, மக்கள் ஏற்றுக் கொண்டார்களோ அதே போல இந்த திட்டமும் மக்களை சென்றடையும், மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் இன்னும் 10 ஆண்டுகளில் அதன் பலன் தமிழகத்திற்கு கிடைக்கும்.
அதற்கு பின் திமுக இந்த திட்டத்திலும் ஸ்டிக்கர் ஒட்டுவார்கள், கருணாநிதி, ஸ்டாலின், அண்ணா படம் போட்டு ஸ்டிக்கர் ஒட்டுவார்கள் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.,மொம்மொழி கொள்கையை இந்த மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எங்களது முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜனை திமுகவினர் கைது செய்துள்ளனர். இதற்கு கண்டனத்தை தெரிய படுத்திக் கொள்கிறோம். இந்தக் கொள்கையை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஒவ்வொரு வீடாக சென்று கையெழுத்து இயக்கத்தை துவங்கியுள்ளோம்.,
40 ஆண்டுகளுக்கு முன் நடத்தியது போல திமுக அரசின் கபட நாடகம் அரங்கேற முடியாது. அனைத்து கட்சி கூட்டம் நடத்தி மும்மொழி கொள்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது குறித்த கேள்விக்கு
திமுகவிற்கு அரசை தக்க வைக்க முடியுமா என்ற பயம் வந்துவிட்டது, ஒன்று மத்திய அரசிடமிருந்து, இன்னொன்று மக்களிடமிருந்து, இவர்கள் செய்யும் செயல்கள் வெட்ட வெளிச்சமாக வெளி வந்து கொண்டிருக்கிறது.
அதனால் நாளைக்கே கூட ஏதாவது கூட்டம் நடத்துவார்கள், ஏற்கனவே பாராளுமன்ற தொகுதியை குறைக்க போகிறார்கள் புலிக்கு பயந்தவர்கள் என்மீது வந்து படுத்துக் கொள்ளுங்கள் என்பதை போல இதை தான் மற்ற கட்சிகளோடு கூட்டம்., நிச்சயமாக மக்கள் தொகை அதிகமாக இருந்தால் குறைந்தது 25% மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடும்.,
மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கை என்பதை காட்டி காட்டி மக்களுக்கு விரோதமான நடவடிக்கையை இந்த அரசாங்கம் செய்து வருகிறது.
மத்திய அரசின் வரி 9%, மாநில அரசின் வரி 9% கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொடுத்த நிதியை விட அதிகமாக தான் மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு கொடுத்துள்ளது., கொடுக்கவில்லை கொடுக்கவில்லை என்று சொல்வதை விடுத்து விவாதத்திற்கு திமுகவை வர சொல்லுங்கள் என எங்கள் மாநிலத் தலைவர் அண்ணமலை கேட்டு வருகிறார்.
தமிழ் நம் தாய்மொழி, ஆங்கிலம் இரண்டாவது மொழி அமெரிக்காவிலேயே ஆட்சியை பிடிக்கும் அளவு வளர்ந்துவிட்டோம், மூன்றாவதாக ஸ்டாலின் அவர்களின் தாய்மொழி தெலுங்கை படிக்க சொல்லுங்க, இந்தியை மட்டும் தான் படிக்க சொல்கிறோம் என சொல்வது வதந்தி., 40 வருடத்திற்கு முன் ஏமாற்றியது போல இன்று எங்களை ஏமாற்ற முடியாது.
பிரான்சு, ஜெர்மன் மொழி வேண்டும் என்றால் ஜெர்மன் மொழி வேண்டும் என போராடுங்க இந்திய மொழியை மட்டும் சொல்லாதீங்க உலக மொழியையும் 10 யை சேருங்க என கேட்கலாம்.
தமிழ்நாடு மக்கள் மேதாவி நாங்கள் இந்திய மொழி மட்டும் வேண்டாம் உலக மொழியையும் சேருங்கள் என நாம் கேட்க வேண்டும்.
சாதாரண பாமரனிடம் சொன்னால் கூட நாடாளுமன்ற கட்டிடமே இருக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கையை விட அதிகமாக தான் கட்டி வைத்துள்ளோம், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்யும் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடும்.
குறையும் என நம்பி கூட்டணியில் அந்த பக்கம் போய்டுவான், இந்த பக்கம் போய்ருவானானு சொல்லும் போது மத்திய அரசு பாஜக தமிழ்நாட்டுக்குள் ஏதாவது சொல்லி உள்ளே வந்திருமானு பயந்து எல்லாக் கட்சியும் காலையில் எழும் போதெல்லாம் செக் செய்யும் வேலையை ஸ்டாலின் செய்து வருகிறார்.
நாளைக்கே ஏதாவது அறிக்கை கொடுத்தால் ஏதாவது கட்சி வரவில்லை என்றால் கூட்டணியில் இல்லை என கணக்கெடுத்து வருவதற்காக ஒரு கூட்டத்தை நடத்துவதை பற்றி பாஜக விளக்கம் கொடுக்க தேவையில்லை.