
பயந்துட்டீங்களா மிஸ்டர் பெரியண்ணன்! வல்லரசு நாடுகள் என்ற பெயரில் உலக பெரியண்ணனாக நீங்கள் இருந்ததை, உங்கள் ஆயுதங்கள் தான் தலை சிறந்த போர் ஆயுதங்கள் என்று உலகை இது நாள் வரை நம்ப வைத்து இப்போது அது பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த சிந்தூர் என்ற அதிரடி தாக்குதலால் பஸ்பமாகி, அமெரிக்க சீன துருக்கி ஆயுதங்கள் வெறும் தகர டப்பா தான் என்று நிருபணமாகி விட்டதால், அதிர்ந்த வெளிப்பாடு – உங்களின் இந்தியாவில் முதலீடு வேண்டாம் என்ற வயிற்றெரிச்சலின் கூவலால் உள்ளுக்குள் இருக்கின்ற பயம் தெரிகின்றது!
ட்ரம்ப் ஐயா .. உலகின் விஸ்வ குருவை நீங்கள் கட்டிப் பிடித்து எனது நண்பர் மோடி என்று சொல்லும் போதே எங்கள் பிரதமர் மோதி உஷாராகி விட்டார் .
ஏனெனில் உலக வரலாற்றில் உங்கள் நாட்டின் முதுகில் குத்தும் பச்சோந்தித்தனம் பலமுறை பல வகைகளில் வெளிப்பட்டு இருப்பதை அறியாதவரா எங்கள் பிரதமர்?
உங்களின் இரட்டை கோபுரங்கள் நசுக்கப்பட்டு உங்கள் நாட்டையே கலங்க வைத்த பயங்கரவாதி பின்லேடனைப் பிடிக்க நீங்கள் பயங்கரவாத பாகிஸ்தான் நாட்டிற்குள்ளேயே ராணுவத்தை அனுப்பி கள்ளாட்டம் ஆடி பின்லேடனை போட்டுத் தள்ளிய போது இருந்த பழிவாங்கும் வெறி எங்கள் பிரதமரிடம் இருக்கக் கூடாதா?
26 பெண்களின் கணவர்களை கண் முன்னே சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள், “போய் உங்கள் மோடி கிட்ட சொல்லு” என்று கொக்கரித்த போதே எங்கள் பிரதமர் இனி உலகில் பயங்கரவாதிகளை அழிக்க இந்தியா தான் முன்னணி வகிக்கும் என்பதை தன் சிந்தூர் தாக்குதல் மூலம் நிருபித்தார். இப்போது உங்கள் ஆயுதங்களின் தர லட்சணங்களை வெளிக் கொணர்ந்தது கண்டு உலக நாடுகள் அமெரிக்கா சீனா பூச்சாண்டித்தனம் இனி செல்லுபடி ஆகாது என சிரிக்கின்றனர். இந்தியாவை இந்தியப் பிரதமரை இந்தியாவின் ராணுவ பலத்தை கண்டு வாயடைத்து வியக்கின்றனர்.
மேக் இன் இந்தியா ஆயுதத் தயாரிப்பை வாங்க வரிசை கட்டி நிற்க முந்தினால் உங்கள் கதி அதோ கதி என பேஜாராகி பீதியில் கண்டபடி உளறி அறிக்கை விடுவதில் இருந்தே அமெரிக்க நம்பகத்தன்மை லட்சணம் சந்தி சிரிக்கிறது .
இதில் அண்டை நாடு சீனா குள்ளநரி பயங்கரவாத பாகிஸ்தானோடு கள்ள உறவாடி இந்தியாவை எப்படி எப்போது நசுக்கலாம் என்று கண்ட கனவு சிந்தூர் அதிரடி தாக்குதலால் மண்ணோடு மண்ணாகிப் போனதைக் கண்டு உள்ளுக்குள் கலங்கி பீதியாகி உங்களோடு சமரசமாகி சித்து வேலை செய்கிறது .
இந்தியா, ஞானிகள் யோகிகள் வாழ்ந்த தர்மத்தின் வழி நடக்கும் நாடு. ஒரு காலத்தில் தான் அடிமையாக்கி வைத்திருந்த நாடு இன்று தன்னையே பின்னிற்கு தள்ளி வளர்ந்து வருவதை உங்களால் நிச்சயம் பொறுத்துக் கொள்ள முடியாது என்பது உங்கள் உளறல்கள் மூலம் தெரிகின்றது .
செய்த வினை செய்வினையாகி தன்னையே தாக்கி அழிக்கும் என்பதை உலகிற்கு அதர்மத்திற்கு எடுத்துச் சொன்ன நாடு எங்கள் இந்தியா .
எக்காலத்திலும் எந்த நாட்டின் மீதும் ஆதிக்கம் செலுத்தியதில்லை எங்கள் பாரதம் . வலிய போரைத் திணித்ததில்லை. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையாகிய காலத்தில் இருந்து 78 ஆண்டுகளாக தலைகனத்துப் போன மதவெறியில் ஹிந்துக்களை பாகிஸ்தான் வாழ விடவில்லை என்பதற்கு அவர்கள் எல்லை தாண்டிய பயங்கரவாதம் சாட்சி என்பது ஊரறிந்த உலகறிந்த உண்மை.
இதை உண்மையாக கண்டிக்காமல் வெளியே பொய்யாகக் கண்டித்து உள்ளே ஆயுதங்களை கொடுத்து உறவாடும் உங்கள் அரசியல் சூழ்ச்சி எத்தனை நாளைக்கு தான் ஜெயிக்கும்?
அதர்மத்தை அடக்கம் செய்து தர்மத்தை வாழ வைக்க இந்தியாவால் மட்டுமே சாத்தியம் என்பதை சிந்தூர் நிருபித்து விட்டது . இனி இந்தியா தர்மத்தின் வழி நடப்பவரை மட்டுமே ஏற்கும் .
உள்ளிற்குள் குமறிப் பயனில்லை டிரம்ப், சீன அரசியல்வாதிகளே. இனி இந்தியா நிச்சயம் அடித்து ஆடும். தேசப்பற்றுள்ள எங்கள் பிரதமர் மோதியை உங்கள் சூழ்ச்சிகளால் ஒரு கூந்தலையும் அசைத்து பார்க்க முடியாது.
ஏனெனில் அவருக்கு அரணாக 140 கோடியில் ஒரு சில உள்நாட்டு துரோகிகளை கழித்தால்கூட மீதமுள்ள மக்கள் உறுதுணையாக நிற்கிறோம். சத்தியம் சோதனைகளுக்கு ஆளானாலும் என்றும் தோற்றதில்லை தோற்பதுமில்லை.
பாரத் மாதா கீ ஜே . ஜெய்ஹிந்த்!
- விஜயலஷ்மி காளிதாஸ்





