வரலாற்றிலேயே சோ ராமசாமி கண்ணீர் சிந்தியது.. ஒரே ஒரு இடத்தில்தான்!

Published:

cho ramasamy - 2026

எல்லா இடங்களிலும் சிரித்துக் கொண்டிருக்கும் சோ அழுத காட்சி வரலாற்றில் ஒன்றே ஒன்றுதான். அது காமராஜர் பணக்காரர் கைக் கூலி, டெல்லியில் இருந்து வரும் அரசியல்வாதி எல்லாம் காங்கிரஸ் பணக்காரர் வீடுகளில்தான் காமராஜரால் தங்க வைக்கப்படுகின்றனர் என திராவிடக் கைக்கூலிகளான கருணாநிதி தமிழக மக்களிடம் பொய்களைக் கூறி சர்ச்சை கிளப்பிய நேரம்.

காமராஜரைக் காணச் சென்ற சோவிடம் இது குறித்துச் சொன்ன காமராஜர், அவரிடம் சட்டெனக் கேட்டார்… “நீ இவ்வளவு நாளும் இங்க வந்து போற, என்னைக்காவது உன்னை என் கூடச் சாப்பிட சொல்லியிருக்கேனா?”

இல்லை என தலையாட்டினார் சோ!

ஒரு காபியாது கொடுத்திருக்கேனா?

நெற்றியினைச் சுருக்கி இல்லை என்றார் சோ!

kamarajar - 2026

இங்கு அவ்வளவுதான் வசதி. நானும் என் சமையல்காரனும் சாப்பிடுற அளவுதான் வசதின்னேன், இது வாடகை வீடுண்ணேன்!

தில்லியில் இருந்து திடீர்னு வர்றவங்களுக்கு இங்க கொடுக்க ஒண்ணுமில்லை. அதான் வசதி உள்ளவங்க வீட்டுக்கு அனுப்புறேன், இது குத்தமா?!

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஒரு ஒண்டிக்கட்டை வீட்டுல என்ன இருக்கும்ணு தெரியாம அவனுக இஷ்டத்துக்கு எழுதுறானுக… என்று சொல்லிவிட்டு கலங்குகின்றார் காமராஜர்.

சோ ராமசாமி கண்ணீர் சிந்திய இடம் இதுதான்! இது ஒன்றுதான்.

kamaraj karunanidhi - 2026

அன்று காமராஜரைப் பற்றி பல பொய்க் கதைகளைக் கூறி தமிழக மக்களை ஏமாற்றி அரசியல் செய்து தங்களை வளப்படுத்தியவர்கள்… தற்போது மோடியைப் பற்றி கட்டுக் கதைகளைக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்!

தமிழகத்தின் சிறந்த அரசியல்வாதியான காமராஜரை இழந்ததுபோல்….மோடியை இழக்க தற்போதைய தமிழக இளைஞர்கள் தயாராக இல்லை!

அன்று ஒரே ஒரு முரசொலி இருந்தது! முரசொலியின் வாக்கைப் பிரதிபலிக்க ஓரிரு நாளிதழ்கள் இருந்தன. ஆனால் நாடக மேடைகளில் தோன்றும் நடிகர்களும் சினிமாக்காரர்களும் முரசொலியை பிரதிபலித்தார்கள்.

இன்று திரும்பிய பக்கமெல்லாம் மீடியாக்கள்! எல்லாமே முரசொலியின் வார்த்தைகளுக்கு முட்டுக் கொடுப்பவை. திமுக.,வே நடத்தும் ஊடகங்கள் பல. அவற்றின் மூலமான பிரசாரங்களும் பலம் வாய்ந்தவை தான்!

ஆனால் இன்று இளைஞர்களின் கையில் இருப்பது செல்போன். அதன் மூலமான தெளிவாக்க பிரசாரங்களால் உண்மையை உணர்ந்து கொண்டுள்ளனர் இளைஞர்கள். விவரம் அறிந்தவர்கள், படித்தவர்கள், திமுக.,வின் பொய்களை நம்பத் தயாராக இல்லை! ஆனால் இன்னமும் குட்டையில் விழுந்து கொண்டு குப்புறப் படுத்துக் கொண்டிருப்பவர்கள், திமுக., அவிழ்த்து விடும் பொய்களைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டு சோம்பேறிகளாய் நேரம் போக்குகிறார்கள்!

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Related articles

Recent articles

spot_img