இந்த ஆண்டின் மிகக் குறைந்த விலையில்… பெட்ரோல், டீசல்!

வணிகம்
05 Sep 15 petrol price - 2026

சென்னையில் இன்று… பெட்ரோல் ரூ.71.62, டீசல் ரூ.66.59

பெட்ரோல்- டீசல் விலை இந்த ஆண்டிலேயே குறைந்த அளவுக்கு விலை சரிந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருப்பதால் கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்து வருகின்றன.

சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் குறைந்து பெட்ரோல் லிட்டருக்கு 71.62 காசுகளாகவும், டீசல், நேற்றைய விலையிலிருந்து 25 காசுகள் குறைந்து லிட்டருக்கு 66.59 காசுகளாகவும் உள்ளது

கடந்த அக்டோபர் மாதம் ரூ.87.18 காசுகள் என்ற அளவுக்கு பெட்ரோல் விலையும், டீசல் ரூ.80.04 காசுகளாகவும் உயர்ந்த நிலையில் உச்சபட்ச விலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் சர்வதேச நடவடிக்கைகளால், நடப்பாண்டிலேயே மிகவும் குறைவான விலைக்கு பெட்ரோல்- டீசல் விலை இன்று சரிந்துள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.