December 5, 2025, 6:54 PM
26.7 C
Chennai

நான்கு இயக்குனர்களின் சங்கமம் !நெட்ஃபிளிக்ஸில் அந்தாலஜி !

kowtham menon - 2025

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களான கெளதம் மேனன், விக்னேஷ் சிவன், வெற்றிமாறன் மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் ஒரு அந்தாலஜி படம் ஒரு உருவாக உள்ளது. நெட்ஃபிளிக்ஸ் எனப்படும் OTT பிளாட்பார்மில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.

சினிமா துறை இன்று பல வகையில் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. அமெரிக்கா, கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் வாடிக்கையாளர்கள் ஒரு வீடியோ சேவை தேவை என கோரிக்கை வைத்தால் அதற்கான கட்டணத்தை செலுத்தி இணையம் மூலமாக அதை டவுன்லோட் செய்து பார்க்கலாம். இந்த சேவை நெட்ஃபிளிக்ஸ் எனப்படுகிறது.

vetri maran - 2025

இப்போது இந்த சேவை இந்தியாவிலும் வழங்கப்படுகிறது. எனவே திரைப்படங்கள் வெள்ளித்திரை மட்டுமின்றி நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற மூலமாகவும் வெளியிட முடியும். முதலில் ஹாலிவுட் படங்கள் தான் இப்படி வெளியாகி கொண்டிருந்தன. இப்போது இந்த கலாச்சாரம் இந்திய சினிமாவிலும் ஆரம்பித்திருக்கிறது.

vignesh sivan - 2025

இப்படி ட்ரெண்டிங்காக இருக்கும் நெட்ஃபிளிக்ஸ் மூலம் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பாலிவுட்டில் முக்கிய இயக்குனர்களான ஜோயா அக்தர், அனுராக் காஷ்யப், திபாகர் ஜானர்ஜி மற்றும் கரன் ஜோகர் ஆகிய நான்கு இயக்குனர்களும் ஒன்று சேர்ந்து அந்தாலஜி படமாக லஸ்ட் ஸ்டோரீஸ் எனும் திரைப்படத்தை இயக்கி அதை நெட்ஃபிளிக்ஸ் மூலம் வெளியிட்டனர். அது பயங்கரமான வெற்றியை அடைந்தது.

sudha kongara 1 - 2025

அதே ட்ரெண்டில் நமது தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களான கெளதம் மேனன், விக்னேஷ் சிவன், வெற்றிமாறன் மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் ஒரு அந்தாலஜி படம் ஒரு உருவாக உள்ளது. தற்போது இந்த நான்கு இயக்குனர்களும் அவரவர் படங்களில் பிஸியாக இருப்பதால் அப்படங்கள் முடிவடைந்த பிறகு இந்த அந்தாலஜி படத்திற்கான வேலைகளை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கெளதம் மேனனின் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா செப்டம்பர் 6ஆம் தேதியும், வெற்றி மாறனின் அசுரன் திரைப்படம் அக்டோபர் 4ஆம் தேதியும் வெளியாக இருக்கிறது. எனவே அவர்கள் அந்த வேலைகளில் மும்மரமாக இருக்கிறார்கள்.

அதே போல் சுதா கொங்கராவும் அவர் இயக்கிய சூரரை போற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக உள்ளார். விக்னேஷ் சிவனும் சிவகார்த்திகேயனை வைத்து இயக்க இருக்கும் படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வெளியில் மும்மரமாக இருக்கிறார்.

lust stories 1 - 2025

இந்த நான்கு இயக்குனர்களும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வருவதால் இந்த நெட்ஃபிளிக்ஸ் மூலம் வெளியாகப் போகும் படத்திற்கான வேலைகளை ஒத்தி வைத்துள்ளனர். இப்படத்தில் ஒவ்வொருவரும் கால் பங்கு அதாவது 25% வேலைகளை மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.

இதற்கு பெரிதாக கால அவகாசம் தேவைப்படாது. இயக்குனர்களை தவிர நடிகர், நடிகையர் என வேறு யாரையும் இன்னும் தேர்வு செய்யவில்லையாம். இதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

நான்கு இயக்குனர்களுக்கும் என்று தனித்தனி பாணி உண்டு. அதனால் இந்த நெட்ப்ளிக்ஸ்சில் ரிலீஸ் ஆகும் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories