கிளாமருக்கு மாறிய இந்துஜா! ‘சூப்பர் டூப்பர்’ என்ன ஆகுமோ?!

indhuja in superduper1

நடிகை இந்துஜா ‘சூப்பர் டூப்பர்’ என்ற படத்தின் மூலம் கவர்ச்சிக்கு மாறி உள்ளார்.

தமிழில் மேயாத மான், மெர்குரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இந்துஜா. தற்போது வெளியான மகாமுனி படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்துள்ளார்.

தான் இது வரை நடித்த படங்கள் அனைத்திலும் குடும்பப் பாங்கான உடையுடன் கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றுவிட்டார் நடிகை இந்துஜா. ஆனால் தற்போது அடுத்த வாய்ப்புகளுக்காக ‘சூப்பர் டூப்பர்’ படம் மூலம் கவர்ச்சிக்கு மாறியிருக்கிறார்.

indhuja in superduper

சூப்பர் டூப்பர் படத்தில் இடம்பெற்ற குத்து பாடலைப் பார்த்த பலரும் ஆச்சரியப் பட்டனர். இதில் இந்துஜா குத்துப் பாடலுக்கே உரிய ஆபாச அசைவுகளுடன் நடனமாடி இருந்தார்.

indhuja superduper

இந்தப் படத்தில் முத்தக் காட்சி ஒன்றும் விமர்சனத்தைப் பெற்றுள்ளது . குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் நடிப்பவர் என்ற இமேஜ் அவர் மீது படிந்துள்ளதால் அதை மாற்றுவதற்கு இது போன்ற விமர்சனங்கள் உதவும் என்றும், அடுத்த பட வாய்ப்புகளை பிடிக்க கவர்ச்சி கைகொடுக்கும் என்றும் கூறுகின்றனர் சினி உலகில்!

indhuja in saree photos 3

ஏகே இயக்கியுள்ள சூப்பர் டூப்பர் குறித்து நாயகன் துருவா கூறிய போது, ‘‘சூப்பர் டூப்பர் படத்தில் காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள் அனைத்தும் இருக்கும். நாயகியும் நானும் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம். அதில் இருந்து எப்படி மீள்கிறோம் என்பது கதை. திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும். படத்தில் துணிச்சலான நாகரீக பெண்ணாக இந்துஜா நடித்திருக்கிறார். முந்தைய படங்கள் போல் இல்லாமல் அவரது கதாபாத்திரம் கவர்ச்சியாக இருக்கும். ஷாரா, ஆதித்யா, ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள்’’ என்றார்.

Advertisements