என் சுயம் பேசும் கதையில் யார் நடிச்சா நல்லா இருக்கும்னா…: சிரஞ்சீவி கைகாட்டும் ‘அந்த நடிகர்’!

சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
chiranjeevi cong - 2026

தன் பயோபிக்கில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தனது விருப்பத்தைக் கூறியுள்ளார் நடிகர் சிரஞ்சீவி.

தற்போது அனைத்து மொழி சினிமா துறைகளிலும் பயோபிக்ஸ் எடுப்பது ட்ரெண்டாகி வருகிறது . இந்த நிலையில், புதிதாக சிரஞ்சீவி தன் பயோபிக் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அது மட்டுமல்ல தன் பயோபிக்கில் யார் ஹீரோவாக நடித்தால் சரியாக எடுபடும் என்றும் கூறியுள்ளார்.

திரைப்பட இயக்குனர்கள் தற்போது தம் பார்வையை பயோபிக்ஸ் திருப்பியுள்ளார்கள். கதை புதிதாக எழுதத் தேவை இருக்காது . நடந்த சம்பவங்களை கொஞ்சம் சினிமாத்தனமாக டச்சப் கொடுத்து திரையில் வெளியிட்டால் போதும். பயோபிக் ரெடி.

அதனால்தான் தற்போது பிரபலங்களின் வாழ்க்கையை திரையில் ஏற்றும் பொறுப்பை மேற்கொண்டுள்ளனர் இயக்குனர்கள். தெலுங்கில் இதுவரை சாவித்திரி, என்டிஆர்,ஒய்எஸ்ஆர் போன்ற லெஜெண்டுகளின் பயோ ஃபிக்ஸ் வந்துவிட்டன.

Chiranjeevi star - 2026

இவற்றுள் சாவித்திரியின் பயோபிக் மஹாநடி பரபரப்பு வெற்றி பெற்று அனைவராலும் பேசப்பட்டது. இதே வழியில் தற்போது சிரஞ்சீவியின் பயோபிக் வரப் போவதாக செய்திகள் வெளியாகின.

புதிதாக மெகா ஸ்டார் சிரஞ்சீவி சைரா பட வெற்றி விழாவில் சில சுவையான கருத்துக்களை வெளியிட்டார். ராம்சரண் தன் பயோபிக்கில் கதாபாத்திரத்தை சரியாகச் செய்வார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் சில பிரச்சினைகள் உள்ளன என்றார்.

தன் பயோபிக்கில் ராம்சரணைவிட வருண்தேஜ், சாய் தரம் தேஜ், வைஷ்ணவ் தேஜ்… இவர்களில் யாரேனும் ஒருவர் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் என்றார்.

actor chiranjeevi - 2026

“இந்த மூவரிலும் என் முக ஜாடை அதிகம் இருப்பதாக நண்பர்கள் கூறுவது வழக்கம். அதனால் இவர்களில் யார் நடித்தாலும் நன்றாக இருக்கும். யாராக இருந்தாலும்… எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடித்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

மொத்தத்தில் சிரஞ்சீவி தன் பயோபிக் திரையில் வருவதை வரவேற்றுள்ளது விசேஷம்தான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.