
அஜித்தின் 60வது படத்திற்கு ‛வலிமை’ என பெயர் சூட்டப் பட்டுள்ளது. அஜித்துக்கும் ஆங்கில எழுத்து ‘வி’ என்பதில் தொடங்கும் படப் பெயர்களுக்கும் என்ன ராசியோ… வி ஃபார் விக்டரி என சொல்வதால், வல்லமை வலிமையாகி இன்று அதன் பெயரும் அறிவிக்கப் பட்டிருக்கிறது .
‛நேர்கொண்ட பார்வை’ என்கேபி என்ற படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார். போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
கடந்த படங்களில் தன் வயதுக்கு ஏற்ற வேடத்தில் கலக்கிய அஜித், ஒரு சிறிய இடைவெளிக்கு பின் இளமையான தோற்றத்தில் மீண்டும் நடிக்கிறார்.
ஆக்சன் படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு ‛வலிமை’ என பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் பூஜை எளிய முறையில் சென்னையில் அக்.18 வெள்ளிக்கிழமை இன்று நடைபெற்றது.



