
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தின் 2ம் பாகமாக துப்பறிவாளன் 2 உருவாக்கப்படுகிறது.
முதல் பாகத்தில் விஷால் ஜோடியாக அனு இமானுவேல் நடித்திருந்தார். அதில் அவர் கொல்லப்படுவார். இதனால், 2ம் பாகத்தில் அவருக்கு பதிலாக வேறொரு ஹீரோயினை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது புது நடிகையாக இருந்தால் குறிப்பிட்ட கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கும் என்று படக்குழு யோசித்தது. ஆடிஷனில் நிறைய பேர் கலந்து கொண்டார்கள்.
இதில்,மதுராவைச் சேர்ந்த லவ்லி சிங் ஹீரோயினாக நடிக்க தேர்வானார். இவர் இந்தியில் சில படங்களில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் குணச்சித்திர வேடங்களில் ரகுமான், கவுதமி நடிக்கின்றனர். இளையராஜா இசை அமைக்கிறார். துப்பறிவாளன் படத்தில் நடித்த பிரசன்னாவும் இதில் நடிக்கவுள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முதல் தொடங்கவுள்ளது. லண்டனில் தொடர்ச்சியாக 45 நாள்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.