
தமிழுக்கும் தமிழருக்கும் அடையாளம் தந்த திருவள்ளுவருக்கு இப்போது பலரும் போட்டி போட்டுக் கொண்டு அடையாளத்தைத் தந்து கொண்டிருக்கின்றனர்.
கடவுள் வாழ்த்து தொடங்கி, அறம், பொருள், இன்பம் வீடு எனும் தர்ம அர்த்த காம மோட்ச எனும் நான்கு பெரும் நிலைகளை விளக்கி, மக்களுக்கான அறநெறி நூலை மனித சமுதாயம் அனைத்தும் பயன்படும் வகையில் கொடுத்தளித்த திருவள்ளுவரை, முதலில் நாத்திகர் ஆக்க முயன்றார்கள் திராவிட இயக்கத்தினர். பின்னர், நீதி நெறி, நல் போதனைகளைத் தந்து, தமிழர்களை தெய்வீகத் தமிழர்களாக வைத்திருந்ததைக் கண்டு மனம் பொறுக்க மாட்டாத கிறிஸ்துவ பாதிரிகள், திருவள்ளுவரை கிறிஸ்துவர் என்று கூறி மதம் மாற்ற முயன்றார்கள்.
இந்நிலையில், இந்த இரண்டு நிலையில் இருந்தும், வழக்கம் போல் தங்கள் தாய் மதம் திருப்பும் செயலை, திருவள்ளுவருக்கும் செய்து விட்டார்கள் பாஜக.,வினர்.
நேற்று பாஜக., சார்பில் வெளியிட்ட ஒரு டிவிட்டர் பதிவில், திருவள்ளுவர் காவி உடை தரித்து நெற்றியில் திருநீறு துலங்க, மங்களகரமாகக் காட்சி அளித்தார்.
ஆனால், சனாதன பற்றுள்ள பண்டைத் தமிழர்கள் வழி வந்தவர்களோ, அந்தப் படத்தையும் ஏற்க மறுத்தனர். திருவள்ளுவர், காவி உடை தரித்தவர் அல்லர். அவர் தூய வெள்ளாடை உடுத்தி, இல்லறத்தில் ஈடுபட்ட முனிவர். மகான். அவருக்கு காவி உடை போடுதல் தவறு. மேலும், அவர் பூணூல் அணிந்த வள்ளுவர்.
முன்னர் கருணாநிதி கொடுத்த யோசனையின் படி, வள்ளுவரின் பூணூலை மறைப்பதற்காக மேலே துண்டு போட்டு வரைந்து, அப்போதிருந்து அரசியலைச் செய்யத் தொடங்கினார்கள். எனவே பூணூல் அணிந்த வெள்ளாடை தரித்த நெற்றியில் திருநீறு துலங்கும் வள்ளுவரையே நாம் அவரது இயல்புப் படியே வரைந்து வைத்து கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.
இந்நிலையில், நாங்களும் சளைத்தவர்கள் அல்லர் என்று கூறி, மறுமலர்ச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் இன்று ஒருவர் வரைந்த திருவள்ளுவர் இப்படி இருக்கிறார். …
திருவள்ளுவன் ‘எங்கள் அய்யன் திராவிடன்’ அல்ல… எங்கள் தமிழின ரிஷிகள் சித்தர்கள் முனிவர்கள் அடையாளம்! தாடியும் ஜடா முடியும் திருநீறு பட்டையும்.! ஆதியும் அவனே அனைத்தும் அவனே ஈசனே வள்ளுவனாக! மறுமலர்ச்சி ஜனதா கட்சி தலைவர் ச.ஜெயகுமார் திருவள்ளுவர் புதிய படம் வெளியிட்டார்!



