
தஞ்சை பிள்ளையார்பட்டியில் தந்தை பெரியாரின் சிலை அவமதிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்!
ஆனால் பிள்ளையார்பட்டியில் அவமதிக்கப்பட்டது திருவள்ளுவர் சிலை என்பதும், திருவள்ளுவர் சிலையை உடனே காவல் துறையினர் களத்தில் இறங்கி தூய்மைப் படுத்தி விட்டார்கள் என்பதும் இன்று வெளியான செய்தி.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக., தலைவர் ஸ்டாலின் பிள்ளையார் பட்டியில் இன்று பெரியார் சிலை அவமதிக்கப் பட்டிருக்கிறது என்று கூறினார்.
இதை அடுத்து, ஒரு வேளை திமுக., தலைமை ‘தந்தை பெரியார்’ சிலையைத்தான் அவமதித்து அரசியல் செய்ய ஏற்பாடு செய்யுமாறு கட்டளையிட்டது போலும்… ஆனால் அதை புரிந்து கொண்டவர்கள், தாடி வைத்த சிலை என்ற காரணத்தால், வள்ளுவருக்கும் பெரியாருக்கும் வித்தியாசம் தெரியாமல் வள்ளுவர் சிலையை களங்கப் படுத்தியிருக்கிறார்கள் போலும் என்று கேலி செய்து வருகின்றனர்.
ஸ்டாலின் அளித்த பேட்டியில்…
திருவள்ளுவருக்கு பதிலாக பெரியார் என ஸ்டாலின் கூறியதை அங்கிருந்த திமுக.,வினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். யாருக்கும் அது குறித்து தவறாக தெரியவில்லை. யாரும் அதை திருத்துவதற்கும் முயற்சி செய்யவில்லை.
இருப்பினும், தனது தவறை மேலும் தவறாக சித்திரிக்கும் வண்ணம், தனது டுவிட்டர் பக்கத்தில், பெரியார் சிலை அவமதிப்பு, திருவள்ளுவர் சிலை காவி சாயம் என ஏதோ பிதற்றி, சமாளித்துள்ளார்.