December 6, 2025, 2:39 AM
26 C
Chennai

முக்காவாசி படமும் கடல்லதான்… ஆனா பேரு ‘ஜுவாலை’!

Rahaman Jibril jwalai - 2025

தமிழ் சினிமாவில் வெகு சில படங்களே கடலில் படமாக்கப் பட்டுள்ளன. அந்தவகையில் மொத்த படத்தில் 75 சதவீதம் இந்திய பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ள படம் ‘ஜூவாலை’. 

இந்தியப் பெருங்கடல் கொண்டுள்ள சிறு சிறு தீவுகளிலும் மீதமுள்ள படம் வளர்ந்து வருகிறது. ‘ஜூவாலை’ படத்தை மனுஷா தயாரிக்க ரஹ்மான் ஜிப்ரீல் நடித்து இயக்குகிறார்.

ரஹமான் ஜிப்ரீல் இயக்குநர் பாலுமகேந்திரா மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றி உள்ளார். தன் முதல் படம் கடலைச்  சார்ந்தும்,  சூழ்நிலைகளைச்  சார்ந்தும் படமாக்க வேண்டி இருப்பதால், பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவதில் உள்ள சிரமங்களை உணர்ந்தவர் அதற்காக, தானே நீண்ட முடி, தாடி சகிதம் தயாராகி உள்ளார். 

கடல் என்ற கதைக்களத்தை கையில் எடுத்து இருந்தாலும், ’ஜூவாலை’ என பெயர் வைத்து இருப்பதில் ஒரு ஆழமான கருத்தை அடக்கியுள்ளது இந்தப் படம் என்கிறார்  இயக்குநர் ரஹமான் ஜிப்ரீல். காதல், காமம், கோபம், வெறுப்பு போன்றவை ஒரு ஜூவாலை மாதிரிதான்.. நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருக்கிறது.. 
அதில் பழிவாங்குதலும் ஒரு ஜூவாலை தான்.

நமக்கான வாழ்வாதாரமாகக் கொடுக்கப்பட்டுள்ள உடல், கடல் மாதிரி இருந்தாலும் அதன் உள்ளடக்கமாக இருக்கும் உணர்வுகள் நன்மை, தீமை அடங்கிய ஜூவாலையை வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது.

நமது உடமை, உரிமை ஏதாவது ஒன்றிற்கு இழப்பு, பாதிப்பு வரும்போது அங்கு பழிவாங்கும் ஜூவாலை பற்றி எரிய வேண்டியது அவசியமாகிறது. ஹீரோ தனது வாழ்விடத்தின் பழிவாங்குதலை ஜூவாலை ஆக்குகிறான்.. அது கடல் என்ற கதைக்களத்தில் வெளிப்படுகிறது என்கிறார் இயக்குநர்  ரஹமான்.

படம் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது. ஹாலிவுட் கேமராமேன் மைக்முஸ் சாம்ப் ஆழ்கடல் காட்சிகளைப் படம்பிடித்து வருகிறார்.. இவர் லண்டனைச் சேர்ந்தவர்.. பிரின்ஸ் ஆஃப் த சிட்டி, பைலட் கஃபே போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். முதன் முறையாக ஒரு தமிழ் படத்திற்கு பணியாற்றுகிறார்.. 
இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள தீவுகளில் படம் வளர்ந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories