
நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தனது மகளின் போட்டோவை முதல் முறையாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
நடிகர் கணேஷ் வெங்கட்ராம், அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன், தனி ஒருவன், இவன் வேறமாதிரி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களில் நடித்தும் வருகிறார் கணேஷ்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலும் கலந்து கொண்டார் கணேஷ் வெங்கட்ராம்.

இந்நிகழ்ச்சியில் மிகவும் நேர்மையாகவும் கண்ணியமாகவும் அவர் நடந்து கொண்ட விதம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றார் கணேஷ் வெங்கட்ராம்.
கணேஷ் வெங்கட்ராம் டிவி தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான நிஷா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஜூன் மாதம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த அன்றே, குழந்தை தனது விரலை பற்றியிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால் அதற்கு பிறகு குழந்தையின் முகத்தை காட்டவில்லை.
இந்நிலையில் இன்று முதல் முறையாக கணேஷ் வெங்கட்ராம் தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளின் போட்டோவை பகிர்ந்துள்ளார். பார்ப்பவர்கள் அனைவரும் வாவ் என வாயை பிளக்கும் அளவுக்கு செம க்யூட்டாக இருக்கிறார் கணேஷின் மகள்.
மகள் மட்டும் தனியாக படுத்திருக்கும் போட்டோ ஒன்றையும், மனைவி மகளுடன் இருக்கும் போட்டோவையும் பதிவிட்டிருக்கிறார் கணேஷ் வெங்கட்ராம்.
மேலும் ஒரு சிறிய முகத்தில் கடவுளின் அருள் அனைத்தும்.. என்று குறிப்பிட்டுள்ள கணேஷ், நண்பர்களே, எங்கள் சிறிய இளவரசி சமைராவுக்கு ஹலோ சொல்லுங்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.
தொடர்ந்து அற்புதமான போட்டோக்களை எடுத்து வேடிக்கையான அனுபவத்தை கொடுத்த அம்ரிதாவுக்கு பெரிய நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கணேஷ் வெங்கட்ராமின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், சமைராவுக்கு ஹலோ சொல்லியிருப்பதோடு செம்ம க்யூட் என தெரிவித்துள்ளனர். மேலும் உன் அம்மாவையும் அப்பாவையும் போல க்யூட்டாக இருக்கிறாய், நீ பெரிய அதிர்ஷ்டசாலி எங்களின் கணேஷ் அண்ணா போன்ற ஒருவர் உனக்கு தந்தையாக கிடைத்திருப்பது என தெரிவித்து வருகின்றனர்.
All of Gods Grace in one tiny Face ????
— Ganesh Venkatram (@talk2ganesh) November 9, 2019
Hi friends, Say hello to our little Princess SAMAIRA ❤️❤️❤️
A big tnx to Amritha fr d awsm click & most importantly fr making it such a fun experience for us ????
???? @mommyshotsbyamrita#firstbabyshoot#SamairaGanesh#4months@Nishaganesh28 pic.twitter.com/9QbwwSh0Ro