
கழுகு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை பிந்து மாதவி. அதனை அடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

அதன்பிறகு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் குடும்பங்களில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிந்துமாதவியும் தன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார்.

கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்துவரும் இவர், ‘மாயன்’ என்னும் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் சிவபெருமானின் மனைவி பார்வதியாக நடித்து வருகிறார். அந்த படத்தின் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்ப்பவர்கள் இது பிந்துமாதவியா என வாயடைத்துப் போகிறார்கள்.

இதில், பிந்து, பார்வதி வேடத்திலும் வினோத், சிவன் வேடத்திலும் இருப்பது போன்று புகைப்படம் உள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும்போது, பிந்துவா இது என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறது பிந்து மாதவியின் பார்வை.

பிந்து மாதவி இதுவரையில் மென்மையான பெண்ணாகத்தான் நடித்து இருக்கிறார். ஆனால், ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் கோபம் வந்தால் பாய்ந்து பாய்ந்து அடிக்கும் பெண்ணாக நடித்து இருப்பார். ஆனால் தற்போது வெளிவந்துள்ள ‘மாயன்’ படத்தின் படங்களைப் பார்க்கும்போது பிந்து பார்வதி வேடத்தில் ரௌத்திரம் நிறைந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருப்பது தெரிகிறது.



