மது வாங்கி செல்வதாக ரசிகரின் பதிவிற்கு பதிலடி கொடுத்த நடிகை!

78bc57ed99cc9ee67df5af820bfd017b

ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவரது புகழ் தமிழ் சினிமாவில் பெருமளவில் பரவியது.

தமிழ் சினிமாவில் நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான என்னமோ ஏதோ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். ஆனால் அப்படம் சரியாக ஓடாததால் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

அதனை தொடர்ந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அத்தியாயம் ஒன்று என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவரது புகழ் தமிழ் சினிமாவில் பெருமளவில் பரவியது. அதன் பிறகு நடிகர் சூர்யாவுடன் இணைந்து என்ஜிகே என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ், தெலுங்கு என மாறி மாறி ஏராளமான திரைப்படங்களில் நடித்துவரும் இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது முகத்தில் முகமுடி அணிந்த படி கையில் பாட்டிலுடன் சாலையை கடந்த வீடியோ வெளியானதை பார்த்த ரசிகர்கள் ரகுல் மதுபாட்டிலை வாங்கி செல்கிறார் என சொல்லப்பட்டது.
தற்போது அந்த வீடியோவிற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ரகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஓ வாவ், மெடிக்கல் ஷாப்பில் மது பானங்களை விற்கிறார்கள், என்பதை நான் இதுவரையில் அறிந்ததில்லை என கூறியுள்ளார். தற்போது அந்த ட்வீட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

Source: Vellithirai News