
நேற்றைய தினம் மரிஜுவானா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவுடன் சினிமா பிரபலங்களும் பங்கேற்று கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட இயக்குனர் கே. பாக்யராஜ் தனது கருத்துகளையும் மற்றும் பல தித்திக்கும் விசயங்களையும் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 40 ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா அடித்திருக்கிறேன் என கூறினார்.
40 வருடங்களுக்கு முன் செய்த தவறு என்பதால் தான் அதை தற்போது தைரியமாக பகிர்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் . மேலும், மரிஜுவானா என்பது கஞ்சாவின் ஆங்கில பெயராகும் அதை தான் படத்தின் டைட்டிலாக படக்குழு வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார்.


