
துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம்.
துளசியில் சாதாரணமாக காணப்படுவது வெண் துளசியாகும். இது தவிர கருந்துளசி, கிருஷ்ண துளசி, ராம துளசி, செந்துளசி, சிவ துளசி, பெருந்துளசி, சிறுதுளசி, கல்துளசி, நல்துளசி, நாய் துளசி, நிலத்துளசி, முள் துளசி, கற்பூர துளசி என அதிக துளசி வகைகள் உள்ளன.
துளசி நோய் நிவாரணி மட்டுமல்ல. சுற்றுச்சூழலிலும் இதன் பங்கு மகத்தானது. காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும் அற்புத பணியை செய்கிறது.
எந்த காய்ச்சலாக இருந்தாலும், துளசியிடம் இருக்கிறது தீர்வு. இதை உலகளவில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்
துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.
நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது.
உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.
சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.
மருத்துவக் குணங்கள்
சளி, இருமல், வறட்டு இருமல் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.
தொற்றுநோய்களை எதிர்க்கும்.
சீரண சக்தியை அதிகரித்து பசியை அதிகரிக்கும்.
வயிற்றுப் பொருமலைத் தணிக்கும்.
துளசிவிதை ஆண்மையை அதிகரிக்கும்.
ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
வெண்தோல், ஆஸ்துமா, மூச்சிறைப்பு, இடுப்புப்பிடிப்பு, சிறுநீரகப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.
மனச்சோர்வு நீங்க, தினமும் காலையில் 15 துளசி இலைகளை பருப்புடன் சேர்த்து மூன்று மாதம் அருந்த மனச்சோர்வு நீங்கி உடல், உள்ளம் பலம் அடையும்.துளசி, சுக்கு, பனை வெல்லம், பால் சேர்த்துத் தயாரிக்கப்படும் டீயை அருந்த சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாகும்.
துளசி வேரைப் பொடித்து நெய்யோடு கலந்து அருந்த ஆண்மை அதிகரிக்கும்.
தேள் கடிக்கு துளசிச் சாறுடன் வேப்ப இலைச்சாறு, மிளகு சேர்த்து அருந்தி, கடிவாயில் பூச நஞ்சு முறிவு ஏற்படும்.
துளசிச் சாறு, இஞ்சிச் சாறு சம அளவு எடுத்து அதனுடன் மிளகுத்தூள் ஒரு சிட்டிகை சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மூக்கடைப்பு, தும்மல், நெஞ்சு சளி பிரச்னைகள் அகலும்.
அலர்ஜியினால் வரும் ஒவ்வாமையை நீக்குகிறது.
நுரையீரலைப் பலப்படுத்துகிறது.
துளசி இலை சுவாசப் பாதையில் உள்ள தொற்றுநோய்க் கிருமிகளை செயலிழக்கச் செய்கிறது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
வயிற்று வலியைப் போக்குகிறது.
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
ஆஸ்த்துமாவிற்கு தீர்வாக உள்ளது.
சுரத்தைப் போக்கும் சஞ்சீவி.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோயைப் போக்கும்.
கொசுக்களை ஒழிக்க துளசி புகைச் சிறந்தது.
துளசி இலையை நீர் சேர்த்துக் காய்ச்சி ஆவி பிடிக்கச் சுரம் நீங்கும்.
மனச்சோர்வு நீங்க, தினமும் காலையில் 15 துளசி இலைகளை பருப்புடன் சேர்த்து மூன்று மாதம் அருந்த மனச்சோர்வு நீங்கி உடல், உள்ளம் பலம் அடையும்.
துளசி, சுக்கு, பனை வெல்லம், பால் சேர்த்துத் தயாரிக்கப்படும் டீயை அருந்த சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாகும்.
துளசி வேரைப் பொடித்து நெய்யோடு கலந்து அருந்த ஆண்மை அதிகரிக்கும்.
தேள் கடிக்கு துளசிச் சாறுடன் வேப்ப இலைச்சாறு, மிளகு சேர்த்து அருந்தி, கடிவாயில் பூச நஞ்சு முறிவு ஏற்படும்.
துளசிச் சாறு, இஞ்சிச் சாறு சம அளவு எடுத்து அதனுடன் மிளகுத்தூள் ஒரு சிட்டிகை சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மூக்கடைப்பு, தும்மல், நெஞ்சு சளி பிரச்னைகள் அகலும்

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நெருங்காது.
துளசிச் சாறு சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகியவைகளைக் குணப்படுத்தும்.துளசி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. இருதயம் போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி உதவுகிறது.
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.
சுத்தமான செம்பு பாத்திரத்தில், கொஞ்சம் நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு கைப்பிடி துளசியைப் போட்டு 8 மணி நேரம் மூடி வைத்து பின்பு அந்த நீரைக் குடிக்க வேண்டும். இதை வெறும் வயிற்றில் 48 நாட்கள் செய்து வந்தாலே எந்த நோயும் அண்டாது.
தினமும் காலையில் 10 துளசி இலையை மென்று தின்பதால் இரத்தம் சுத்தியடையும். மார்பு வலி, தொண்டை வலி, வயிற்று வலி ஆகிய கோளாறுகள் நீங்கும்.
துளசி சாறுடன் கொஞ்சம் தேன் கலந்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குணமாகும். இருமல், சளி, ஜலதோஷம் உள்ளிட்டவைகளுக்கு இலவசமாக கிடைக்கும் அருமருந்து துளசி. இருமலைக் கட்டுப்படுத்தும் யூஜினால் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதில் உள்ளன.
வளிமண்டலத்திலுள்ள மாசுக்களை சுத்திகரிக்க
சுற்றுச்சூழலிலும் துளசியின் பங்கு மகத்தானது. காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும் அற்புத பணியை செய்கிறது. இந்த பணியை பெரும்பாலான தாவரங்கள் செய்தாலும், துளசிக்கும் மற்ற தாவரங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. துளசியிலுள்ள மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களால் வளிமண்டலத்திலுள்ள புகைக் கிருமிகள் போன்ற மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. அதனால் சுத்தமான காற்று கிடைக்கிறது. துளசி, அதிகம் உள்ள இடங்களில் கொசுக்கள் வராது.
‘‘10 துளசி இலையுடன் 5 மிளகை நசுக்கி, 2 டம்ளர் நீர்விட்டு, அரை டம்ளர் சுண்டும்படி காய்ச்சி, குடித்து விட்டு, சிறிது எலுமிச்சை சாறை அருந்தி, கம்பளிக் கொண்டு உடம்பு முழுக்க மூடிக்கொண்டு படுத்தால் மலேரியா காய்ச்சல் கூட படிப்படியாக குறையும்’’
தலை வலி உடலில் வெப்பம் அதிகம் இருந்தால், தலை வலி வரக்கூடும் என்பது தெரியுமா? ஆம், அப்படி வரும் தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு துளசியை அரைத்து, அதில் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும்.
கண் பிரச்சனைகள் கருப்பு துளசியின் சாறு கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். அதிலும் கண்களில் புண் இருந்தால், கடுமையான அரிப்பு, எரிச்சல் ஏற்படும். அப்போது துளசியின் சாற்றினை கண்களில் ஊற்றினால், விரைவில் குணமாகும்.
இதய நோய் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

நீரிழிவு நோயாளிகள் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து, இன்சுலின் சீராக சுரக்கப்பட்டு, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்
சிறுநீரக கற்கள் துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும்.
மன அழுத்தத்தைக் குறைக்கும் மன அழுத்தம் என்பது தற்போது அதிகம் உள்ளது. உங்களுக்கு மன அழுத்தமில்லாத வாழ்க்கை வாழ ஆசை இருந்தால், துளசி இலையை தினமும் சாப்பிட்டு வாருங்கள். இதனால் அதில் உள்ள அடாப்டோஜென் மன அழுத்தத்தைப் குறைக்கும்.
பூச்சி கடி
கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு பூச்சிக் கடிகளால் சிலருக்கு உடலில் அலர்ஜி உண்டாகி சருமம் பாதிக்கப்படும். அல்லது வேறு வகைகளில் பாதிப்பு ஏற்படும். இந்த பூச்சிகளின் விஷத்தன்மை நீங்க துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் சம அளவு தும்பைச் சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வந்தால் விஷம் எளிதில் இறங்கும்
துளசி இலை ஊறிய நீரை 1 மண்டலம் அருந்தி வந்தால் முக்குற்றங்களில் ஒன்றான பித்த அதிகரிப்பு குறையும். இதனால் கண் நரம்புகளின் சூடு குறைந்து நரம்புகள் பலப்படும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது.
சரும நோய்
தேமல், படை உள்ள இடங்களில் துளசியும் உப்பும் சேர்த்து அரைத்து பூசி வந்தால் சரும நோய்கள் நீங்கும்
துளசி இலை, புதினா இரண்டையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் கிராம்புப் பொடி சேர்த்து தினமும் பல் துலக்கி வந்தால், பற்களின் சொத்தை, பல் ஈறு வீக்கம் மேலும் பற்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.
தலைவலி
ஒரு கைப்பிடி துளசி இலை மூன்று மிளகு, 1 துண்டு இஞ்சி எடுத்து நன்கு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும். கண்நோய்
துளசி இலைக்கு கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் இதனால் அதிகரிக்கிறது. துளசி இலைகளை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து அந்த அந்நீரில் ஒரு கிளாஸ் நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இதயத்திற்கு நல்லது : துளசி இலை இதய ஆரோக்கியத்திற்கு உகந்தது என்று அறியப்படுகிறது. துளசிக்கு அழற்சியை குறைக்கும் தன்மை உண்டு. இதன் அன்டி ஆக்ஸ்சிடென்ட் தன்மை மற்றும் வீக்கத்தை குறைக்கும் தன்மை , உடலின் சீரான இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது, மற்றும் இதயம் தொடர்பான வலிகளை தடுக்கிறது.
கல்லீரலுக்கு நல்லது: துளசியில் இருக்கும் அன்டி ஆக்ஸ்சிடென்ட் தன்மையால், கல்லீரலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி , கொழுப்பு சேருவதைக் குறைக்கிறது. இதனால் கல்லீரலில் உண்டாகும் பாதிப்புகள் குறைகிறது. தொடர்ந்து துளசியை உட்கொள்வதன்மூலம் கல்லீரலில் நச்சுகள் வெளியேறி பாதுகாக்கப்படுகிறது.
செரிமானத்தை அதிகரிக்கிறது : காலையில் வெறும் வயிற்றில் துளசி நீரை பருகுவது, செரிமானத்தை மேம்படுத்த சிறந்த வழியாகும். உடலின் pH அளவை பராமரிக்க உதவுகிறது மற்றும் உடலின் அமில தன்மையை சமச்சீராக வைக்க உதவுகிறது
துளசி இலைகளைத் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகள் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும் புத்துணர்ச்சியும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.மது உடலுக்கான கிருமிநாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப்போட்டு ஊறவைத்த நீரைத் தொடர்ந்து பருகி வந்தால் சர்க்கரை நோய் நம்மை அண்டாது.
கோடைக்காலத்தில் வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும்.
துளிசி இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு நன்கு மைபோல் அரைத்து அந்த விழுதைத் தோலில் தடவி வந்தால் பல நாட்களாக இருக்கும் படை, சொறி, சிரங்குகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
சிறுநீர்க்கோளாறு உள்ளவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வரவேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவுக்கு தண்ணீர் பருகுகிற பிரச்னையும் நிவர்த்தியாகும்.
துளசிக்குக் காய்சலைத் தடுக்கக்கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். உடலில் பாதுகாப்பு கட்டமைப்பை மொத்தமாக சீர்படுத்தக்கூடிய வல்லமை துளசிக்கு உண்டு.
உடலில் ஏற்படும் கொப்புளங்களுக்குத் துளசி இலையை நீர்விட்டு அரைத்துப் பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசிச்சாறு ஒரு சிறந்த நிவாரணி.
எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு.
துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சம அளவு எலுமிச்சைச்சாறு கலந்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்துக் குளித்துவர பேன் பொடுகுத் தொல்லை நீங்கும்.
துளசி இலையை இடித்துப் பிழிந்து அந்தச் சாறுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும்.
வெட்டுக் காயங்களுக்குத் துளசி இலைச்சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமடையும்.
வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களைக் கட்டி வைத்தாலும் வீட்டைச் சுற்றி துளசிச் செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.
துளசி இலை ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மைப் பலநோய்களிலிருந்து காக்கிறது.
சுத்தமான மண்பானைத் தண்ணீரில் கொஞ்சம் துளசி இலைகளை ஊறப்போட்டு அந்தத் தண்ணீரை அடிக்கடி குடித்து வந்தால் எந்த நோயும் அண்டாது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
துளசியில் பல மருத்துவகுணங்கள் உள்ளன.துளசி மருத்துவ ரீதியாக மட்டும் அல்லாமல் சுற்றுசூலில் முக்கிய இடத்தை வகிக்கிறது.அதோடு காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை சேகரித்து ஆக்சிஜனை வெளியேற்றும் வேலையை செய்கிறது.காய்ச்சல் மற்றும் சளிக்கு துளசி சிறந்து என உலகளவில் மருத்துவ நிபுணர்கள் ஒப்பு கொண்டுயுள்ளனர்.
ஆகையால் மனிதன் ஆரோக்கியமாக வாழ தினமும் 6 அல்லது 7 துளசி இலைகளை மென்று சாப்பிட்டால் வாழ்நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு எந்த விதமான நோய்கள் இல்லாமல் வாழலாம்.துளசிகளில் பல இனங்கள் உள்ளன.
துளசி இலைகளை போட்டு புட்டு போல் அவித்து சாறு பிழிந்து 10மி.லி வீதம் காலை,மாலை என இருவேளை குடித்து வர பசியை அதிகமாக்கும்,இதயம்,கல்லீரல் ஆகியவற்றைப் பலப்படுத்தும் ரத்தம் சுத்தமாகும்.தாய்ப்பால் பெருகும்.
துளசி இலைச்சாறு 10 மி.லி, தேன் 50 மி.லி மற்றும் வெண்ணீர் 50மி.லி கலந்து காலை ,மாலை என இருவேளை 40 நாட்கள் சாப்பிட்டு வர இருதய நோய் குணமாகும்.
சளி,இருமல்,ஆஸ்துமா போன்றவற்றிக்கு காலையில் வெறும் வயிற்றில் துளசி இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி துளசி இலைசாறினை பருகி வந்தால் நிவாரணம் பெறலாம்.
துளசி இலையை பறித்து அதில் எலுமிச்சைசாறு விட்டு மைய அரைத்து சொறி,சிரங்கு,படர்தாமரை போன்றவற்றிக்கு போட்டு வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
வியர்வை துர்நாற்றம் உள்ளவர்கள் குளிக்கும் தண்ணீரில் துளசி இலைகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் அந்த தண்ணீரில் குளித்தால் வியர்வை துர்நாற்றம் இருக்காது.
துளசி இலைச்சாறு,வில்வ இலைச்சாறு இரண்டையும் 100 மிலி அளவு எடுத்து அதனுடன் 20 மிலி தேங்காய் எண்ணெய் கலந்து நன்றாக காய்ச்சி பின் வடிகட்டி வாரம் இருமுறை தலைக்கு குளித்து வந்தால் சைனஸ் தொல்லை நீங்கும்.
காலையில் வெறும் வயிற்றில் துளசி இலை அல்லது துளசி இலைச்சாறு உண்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.அதோடு உடலின் அமிலத்தன்மையை சீராக வைத்து கொள்ள உதவுகிறது.மேலும் உடம்பில் ph அளவை பராமரிக்கிறது.
தொடர்ந்து இருமலால் அவதி படுவார்கள் சிறிதளவு துளசி இலை மற்றும் சிறிதளவு கற்பூரவல்லி இலை சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 1 டம்ளர் தண்ணீர் 1/2 டம்ளராக வந்த பிறகு இறக்கி பின் வடிகட்டி அந்த தண்ணீரை குடித்து வந்தால் இடைவிடாமல் வரும் இருமல் பூரண குணமாகும்.
துளசிச்சாறு,வெங்காயச்சாறு,எலுமிச்சைசாறு,விளக்கெண்ணெய் சம அளவு எடுத்து காய்ச்சி 15 கிராம் முதல் 30 மிலி வீதம் உட்கொண்டு வர,பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
துளசி விதையை பாலில் போட்டு காய்ச்சி குடித்து வர வெள்ளை,வெட்டை,மேக நோய்கள் குணமாவதுடன் மகப்பேறும் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே உட்கொண்டு வர பிரசவம் எளிதாகும்.



Mul Thulasi’ Botanical name???