தமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக உள்ள விஜய். நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.
இந்தப்படத்தில் விஜய்-க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது மாஸ்டர் படம்.
இந்நிலையில் தற்போது நெட்டிசன்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் காட்சியில் ஒன்றாக இருப்பது போன்ற படங்களை கச்சிதமாக உருவாக்கி வருகின்றனர். மாஸ்டருக்கான புரமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளனர்.
மாஸ்டர் திரைப்படத்தில இப்படி இருவரும் இணைந்து இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தால் நிச்சயம் அதில் தீப்பொறியும் டென்சனும் அதிகமாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
#Master @actorvijay , @VijaySethuOffl pic.twitter.com/aKeHuCybWI
— #Master (@MasterMovieOffi) October 17, 2020



