தமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Tamil Rockers தமிழ் சினிமாவில் ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு மேலாக இந்த இணையதளத்தை முடக்க பலவகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது அந்நிறுவனமே இணையதளத்தை முடக்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களை உடனடியாக இணையதளத்தில் வெளியிட்டு திரைத் துறைக்கு பெரும் சேதாரங்களை ஏற்படுத்தி வந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கப்படுவதாக அந்த இணைய தளமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எதன் காரணமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடங்கியது என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. தமிழ் சினிமாவில் ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு மேலாக இந்த இணையதளத்தை முடக்க பலவகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது அந்நிறுவனமே இணையதளத்தை முடக்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.



